தண்ணீர் வழங்காத கர்நாடகா மீது புகார்

தண்ணீர் வழங்காத கர்நாடகா மீது புகார்

1 mins read
eb5cee8a-4f47-45f5-8b2e-eb5eb463817c
-

புது­டெல்லி: காவிரி நதி­நீர் மேலாண்மை ஆணை­யம் பிறப்­பித்த உத்­த­ர­வு­களை கர்­நா­டக அரசு செயல்­ப­டுத்­த­வில்லை என தமி­ழக அரசு குற்­றம்­சாட்டி உள்­ளது.

டெல்­லி­யில் நேற்று நடை­பெற்ற காவிரி மேலாண்மை ஆணை­யத்­தின் பதி­னான்­கா­வது கூட்­டத்­தில் நான்கு மாநி­லங்­க­ளைச் சேர்ந்த அதி­கா­ரி­கள் பங்­கேற்­ற­னர்.

அப்­போது, கர்­நா­டக அரசு காவிரி நீரை முறை­யாக வழங்­க­வில்லை என தமி­ழ­கத் தரப்­பில் புகார் எழுப்­பப்­பட்­டது.

"உச்ச நீதி­மன்ற உத்­த­ர­வுப்­படி கர்­நா­டகா நடந்து கொள்­ள­வில்லை. அம்­மா­நி­லத்­தில் பருவ மழை அதிக அள­வில் பெய்து வரு­கிறது. எனி­னும் தமி­ழ­கத்­துக்கு உரிய காவிரி நீரை வழங்­க­வில்லை. நடப்பு செப்­டம்­பர் மாதம் 23ஆம் தேதி­வரை 37.3 டிஎம்சி காவிரி நீர் வழங்­கப்­ப­டா­மல் நிலு­வை­யில் உள்­ளது.

"காவிரி மேலாண்மை ஆணை­யத்­தின் உத்­த­ர­வை­யும் செயல்­ப­டுத்­தாத கர்­நா­டக அரசு அக்­டோ­பர் மாதத்­துக்­கு­ரிய நீர் பங்­கீட்­டை­யும் தமி­ழ­கத்­துக்கு உட­ன­டி­யாக வழங்க உத்­த­ர­விட வேண்­டும்," என்று தமிழக அரசு வலி­யு­றுத்­தி­யது.