பள்ளிகளைத் திறக்க மருத்துவ ஆய்வுக் கழகம் பரிந்துரை

பள்ளிகளைத் திறக்க மருத்துவ ஆய்வுக் கழகம் பரிந்துரை

2 mins read
2597383c-38f6-4797-bd4b-805cc65a63c8
-

201 நாள்களுக்குப் பிறகு அன்றாட பாதிப்பும் 193 நாள்களுக்குப் பின் இறப்பும் குறைந்தது

புது­டெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்­றுப் பாதிப்பு குறைந்து வரும் நிலை­யில், நாடு முழு­வ­தும் உள்ள பள்­ளி­களை திறப்­பது குறித்து மத்­திய அர­சுக்கு இந்­திய மருத்­துவ ஆய்வுக் கழகம் (ஐசி­எம்­ஆர்) தனது பரிந்­து­ரை­களை அளித்­துள்­ளது.

பகுதி பகு­தி­யா­கப் பள்­ளி­களைத் திறப்­பது நல்­லது என்­றும் அனைத்­துப் பள்­ளி­க­ளி­லும் உரிய முன்­னேற்­பாடு நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள வேண்­டும் என்­றும் அக்கழகம் வலி­யு­றுத்தி உள்­ளது.

பள்­ளி­களில் கொரோனா பரி­சோ­தனை மையம் அமைக்­கப்­பட வேண்­டும் என்­றும் யாருக்­கே­னும் கொரோனா தொற்று உறுதி செய்­யப்­பட்­டால் உட­ன­டி­யாக அப்­பள்­ளியை மூட வேண்­டும் என்­றும் ஐசி­எம்­ஆர் பரிந்­து­ரைத்­துள்­ளது. முத­லில் துவக்­கப் பள்­ளி­களை திறக்க வேண்­டும். பின்­னர் இடை­நிலை, உயர் நிலைப் பள்­ளி­க­ளைத் திறக்க வேண்­டும் என்றும் குறிப்­பிட்­டுள்­ளது.

எளி­தில் தொற்­றுப் பாதிப்­புக்கு ஆளா­கக்­கூ­டிய மாண­வர்­க­ளைக் கண்­ட­றி­வது, ஒரு­நாள் விட்டு ஒரு­நாள் என சுழற்சி முறை­யில் மாண­வர்­கள் பள்­ளிக்கு வர அனு­ம­திப்­பது உள்­ளிட்ட மேலும் பல பரிந்­து­ரை­களை மருத்­துவ ஆய்வுக் கழகம் மத்­திய அர­சி­டம் அளித்­துள்­ளது.

இந்நிலையில் பூஸ்­டர் தடுப்­பூ­சி­யின் செயல்­தி­றனை நிரூ­பிக்­கும் அள­வுக்கு போதிய விஞ்­ஞான ரீதி­யான ஆதா­ரங்­கள் இல்லை என டெல்லி எய்ம்ஸ் மருத்­து­வ­ம­னை­யின் தலை­வர் ரந்­தீப் குலே­ரியா தெரி­வித்­துள்­ளார். எனவே, பூஸ்­டர் தடுப்­பூசி தேவை­யில்லை என்­றும் அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

இதற்­கி­டையே நேற்று முன்­தி­னம் தொற்று எண்­ணிக்கை 201 நாள்­களுக்­குப் பின்­னர் 18,795 ஆகக் குறைவாகப் பதி­வா­னது என சுகா­தார அமைச்சு தெரி­வித்­தது. நேற்று முன்­தி­னம் 179 பேர் பலி­யா­கி­னர். இதன் மூலம் கடந்த 193 நாள்­க­ளுக்­குப் பின் உயி­ரி­ழப்­பும் குறை­வா­கப் பதி­வாகி உள்­ளது என்­றும் அமைச்சு கூறி­யுள்­ளது.