சிறார்களுக்கு தடுப்பூசி: சீரம் நிறுவன பரிசோதனைக்கு மத்திய அரசு அனுமதி

புது­டெல்லி: இந்­தி­யா­வில் இயங்கி வரும் சீரம் மையம் ஏழு முதல் பதி­னோரு வய­துக்­குட்­பட்ட சிறார்­க­ளுக்கு என கொரோனா தடுப்­பூ­சியை உற்­பத்தி செய்­துள்­ளது. இதை மருத்­துவ ரீதி­யில் பரி­சோ­தித்­துப் பார்க்க அனு­மதி அளிக்­கப்­பட்­டுள்­ளது.

நாடு முழு­வ­தும் தடுப்­பூசி போடும் நட­வ­டிக்கை தீவி­ர­மாக நடை­பெற்று வரு­கிறது. தின­மும் லட்­சக்­க­ணக்­கா­ன­வர்­க­ளுக்கு தடுப்­பூசி போடப்­ப­டு­கிறது.

இந்­நி­லை­யில், ஏழு முதல் பதி­னோரு வய­துக்­குட்­பட்ட குழந்தை­க­ளுக்­கான தடுப்­பூ­சியை பரி­சோ­தித்­துப் பார்க்க 11 மத்­திய மருந்து தரக்­கட்­டுப்­பாட்டு அமைப்பு அனு­மதி அளித்­துள்­ளது.

"விரி­வான ஆலோ­ச­னை­க­ளுக்­குப் பிறகு ஏழு முதல் பதி­னோரு வய­துக்­குட்­பட்ட சிறார்­க­ளுக்கு பரி­சோ­த­னைக்கு உட்­ப­டுத்த உரிய நெறி­மு­றை­க­ளைப் பின்­பற்றி அனு­ம­திக்­கப்­ப­டு­கிறது," என மருந்து தரக்­கட்­டுப்­பாட்டு அமைப்பு தெரி­வித்­துள்­ளது.

சீரம் மையம் ஏற்­கெ­னவே 12 முதல் 17 வய­துக்­குட்­பட்ட பதின்ம வய­தி­ன­ருக்­கான கொரோனா தடுப்­பூ­சியை மருத்­துவ ரீதி­யில் பரி­சோ­தித்து வரு­கிறது.

இது ஆஸ்ட்ராஸெனக்கா வகை தடுப்­பூ­சி­யா­கும். எனி­னும் சீரம் மையம் அதை இந்­தி­யா­வில் உற்­பத்தி செய்­கிறது. இந்­தப் பிரி­வி­ன­ருக்­கான பரி­சோ­த­னை­யின் முடி­வில் முதற்­கட்­ட­மாக நூறு பங்­கேற்­பா­ளர்­க­ளைப் பற்­றிய முழுத் தர­வு­க­ளை­யும் அந்­நி­று­வ­னம் மத்­திய அர­சி­டம் அளித்­துள்­ளது.

இந்­தி­யா­வில் அவ­ச­ர­கால பயன்­பாட்­டுக்­காக பெரி­ய­வர்­க­ளுக்­கும் 12 வய­துக்கு மேற்­பட்­ட­வர்­க­ளுக்­கும் பயன்­ப­டுத்­து­வ­தற்­கான ஸைடஸ் கேடிலா நிறு­வ­னத்­தின் தடுப்­பூ­சிக்கு ஏற்­கெ­னவே அனு­மதி அளிக்­கப்­பட்­டுள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!