பெங்களூரில் இரவு ஊரடங்கு நீட்டிப்பு
பெங்களூரு: கொரோனா இரவு நேர ஊரடங்கு பெங்களூரில் அக்டோபர் 11ஆம் தேதி வரை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இரவு பத்து மணி முதல் அதிகாலை ஐந்து மணிவரை இந்த உத்தரவு அமலில் இருக்கும் என பெங்களூரு காவல்துறை தலைவர் தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் தற்போது தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது.
35 புதிய பயிர் வகைகள் அறிமுகம்
புதுடெல்லி: இந்திய வேளாண் ஆராய்ச்சி மையம் உருவாக்கி உள்ள சிறப்புப் பண்புகளுடன் கூடிய 35 புதிய பயிர் வகைகளை பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். பருவநிலை எதிர்வினை தொழில் நுட்பங்களைப் பின்பற்றி மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இப்பயிர் வகைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு முழு நேரத் தலைவர் நியமனம்
புதுடெல்லி: காவிரி மேலாண்மை ஆணையத்தின் முழு நேர தலைவராக எஸ்கே ஹல்தர் நியமிக்கப்பட்டுள்ளார். அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு இவர் தலைவராக இருப்பார். எஸ்கே ஹல்தர் மத்திய நீர்வள ஆணையத்தின் தலைவராகவும் உள்ளார். இதற்கிடையே தமிழகத்துக்கு காவிரியில் இருந்து 37 டிஎம்சி தண்ணீரை உடனடியாக திறந்துவிட வேண்டும் என மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

