சிறு நிலப்பகுதியில் 400 மரங்கள் வளர்த்து சாதனை

சிறு நிலப்பகுதியில் 400 மரங்கள் வளர்த்து சாதனை

1 mins read
8ca76519-e9d1-4490-bbcd-c49e0857531d
-

திரு­வ­னந்­த­பு­ரம்: ஜப்­பா­னில் பின்­பற்­றப்­படும் குறுங்­கா­டு­கள் வளர்ப்பு திட்­டத்­தின்­படி செயல்­பட்டு மூன்று சென்ட் நிலத்­தில் 400 மரங்­களை வளர்த்து சாதனை படைத்­துள்­ளார் கேர­ளா­வைச் சேர்ந்த ஹரி (படம்).

12 ஆண்­டு­க­ளுக்கு முன்பு தனது விளை­நி­லத்தை விற்­று­விட்டு பிழைப்­புக்­காக திரு­வ­னந்­த­பு­ரத்­தில் குடி­யே­றி­யுள்­ளார் இவர்.

"வந்த இடத்­தி­லும் செடி கொடி­களை வளர்த்த போதி­லும், கடும் கோடை வெயி­லால் எது­வும் துளிர்க்­க­வில்லை. எனினும், மனம் தளராமல் செயல்பட்டேன்.

"அப்­போ­து­தான் தாவ­ர­வி­ய­லா­ளர் அகிரா மியா­வா­கி­யின் தொழில்­நுட்­பத்­தைப் பயன்­ப­டுத்த தொடங்­கி­னேன். இதன் மூலம் வளர்க்­கப்­படும் மரங்­கள் பத்து மடங்கு வேக­மா­க­வும் 30 மடங்கு அடர்த்­தி­யா­க­வும் வள­ரும்," என்­கி­றார் ஹரி.

18 மாதங்­களில் தனது சிறிய நிலப்­ப­கு­தியை பசு­மை­யான சோலை­யாக மாற்­றி­விட்­ட­தாக பெரு­மி­தத்­து­டன் குறிப்­பி­டு­ப­வர், மரங்­களை இடை­வெளி இல்­லா­மல் மிக நெருக்­க­மாக நட­வேண்­டும் என்­றும் இத­னால் சூரிய ஒளியை கிர­கிப்­ப­தற்­காக அவை போட்டி போட்­டுக்­கொண்டு வள­ரும் என்­றும் சொல்­கி­றார்.