சித்து உள்ளிட்ட தலைவர்கள் திடீர் விலகல்: நெருக்கடியில் காங்கிரஸ்

புது­டெல்லி: காங்­கி­ரஸ் கட்­சி­யின் மாநி­லத் தலை­வர்­கள் பலர் விலகி வரு­வது கட்­சித் தலை­மைக்கு கவ­லையை ஏற்­ப­டுத்தி உள்­ளது. இந்­நிலை­யில் பஞ்­சாப் காங்­கி­ரஸ் தலை­வர் பத­வி­யில் இருந்து நவ்­ஜோத் சிங் சித்து திடீ­ரென வில­கி­யுள்­ளார்.

பஞ்­சாப் முன்­னாள் முதல்­வர் அம­ரீந்­தர் சிங்­குக்­கும் சித்­து­வுக்­கும் இடையே பகி­ரங்க மோதல் நில­வி­யது. இதன் கார­ண­மாக முதல்­வர் பத­வி­யில் இருந்து அம­ரீந்­தர் வில­கி­னார். இத­னால் சித்து தரப்பு மகிழ்ச்சி அடைந்­த­தாக செய்­தி­கள் வெளி­யான நிலை­யில், திடீர் திருப்­ப­மாக சித்­து­வும் மாநி­லத் தலை­வர் பத­வி­யில் இருந்து வில­கி­யுள்­ளார்.

எனி­னும், கட்­சிக்கு தொடர்ந்து தொண்­டாற்­றப் போவ­தாக சோனியா காந்­திக்கு எழு­திய கடி­தத்­தில் அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

இதற்­கி­டையே, அம­ரீந்­தர் சிங் டெல்­லி­யில் பாஜக தேசி­யத் தலை­வர் ஜே.பி.நட்­டா­வை­யும் உள்­துறை அமைச்­சர் அமித்­ஷா­வை­யும் சந்­திக்க இருப்­ப­தாக வெளி­யான தக­வல் காங்­கி­ரஸ் வட்­டா­ரங்­களில் சல­ச­லப்பை ஏற்­ப­டுத்தி உள்­ளது.

மற்றொரு நிலவரத்தில், கேரளா, கோவா மாநில காங்­கி­ரஸ் மூத்த தலை­வர்­கள் இரு­வர் அடுத்­த­டுத்து கட்­சியை விட்டு விலகி உள்­ள­னர்.

கோவா முன்­னாள் முதல்­வர் லூசினோ பெலிரோ அம்­மா­நி­லத்­தின் செல்­வாக்­கு­மிக்க தலை­வர்­களில் ஒரு­வ­ராக கரு­தப்­ப­டு­கி­றார். அடுத்த ஆண்டு நடை­பெற உள்ள சட்­டப்­பே­ர­வைத் தேர்­தலை ஒட்டி அமைக்­கப்­பட்­டுள்ள தேர்­தல் குழுக்­க­ளின் ஒருங்­கி­ணைப்­பா­ள­ராக காங்­கி­ரஸ் தலைமை அண்­மை­யில் அவரை நிய­மித்­தது.

இந்­நி­லை­யில், அவர் கட்­சிப் பதவி, எம்­எல்ஏ பதவி ஆகிய பொறுப்­பு­களில் இருந்து திடீ­ரென வில­கி­யுள்­ளார். அவர் மேற்கு வங்க முதல்­வர் மம்தா தலை­மை­யி­லான திரி­ணா­முல் காங்­கி­ரஸ் கட்­சி­யில் இணைவதாகக் கூறப்­ப­டு­கிறது.

இதே போல் கேர­ளா­வில் காங்­கி­ரஸ் மூத்த தலை­வர் வி.எம்.சுதீ­ரன் கட்­சியை விட்டு வில­கி­னார். மாநில அள­வி­லான கட்­சிப் பொறுப்பு­களுக்கு தமது ஆத­ர­வா­ளர்­களை நிய­மிக்­கா­த­தால் அவர் வருத்­தத்­தில் இருந்­த­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

தலைவர்களின் விலகலால் காங்கிரஸ் தலைமை நெருக்கடியில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!