லஞ்சம் பெற்ற எய்ம்ஸ் துணை இயக்குநர் அதிரடிக் கைது

லஞ்சம் பெற்ற எய்ம்ஸ் துணை இயக்குநர் அதிரடிக் கைது

1 mins read
ea10831c-b025-40d8-989e-c323085a80b1
-

போபால்: லஞ்சம் வாங்கிய புகாரின் பேரில் போபால் எய்ம்ஸ் மருத்துவமனையின் துணை இயக்குநரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.

அவரது வீட்டைச் சோதனையிட்ட போது பல்வேறு வங்கிகளில் ஒரு கோடி ரூபாய் லஞ்சப் பணத்தை வைத்திருப்பது தெரிய வந்தது.

மருத்துவமனைக்கு வழங்கிய மருந்துகளுக்கான தொகையை விடுவிக்க அவர் லஞ்சம் பெற்றபோது சிபிஐ அதிகாரிகளிடம் கையும் களவுமாகப் பிடிபட்டார்.