திருப்பதி உண்டியல் வருமானம் மேலும் கூடியது

திருப்பதி உண்டியல் வருமானம் மேலும் கூடியது

2 mins read
fae95993-dc32-41bb-8726-0d2040673e24
-

திரு­மலை: திருப்­பதி ஏழு­ம­லை­யா­னுக்கு உண்­டி­யல் வரு­வாய் மேலும் அதி­க­ரித்­துள்­ளது.

உண்­டி­யல் வரு­மா­னம் மட்­டு­மல்­லா­மல் அறை வாடகை உள்­ளிட்ட வரு­வாய்­களும் கூடி­யுள்­ளன. கிரு­மித்­தொற்று பர­வல் கார­ண­மாக கடந்த மார்ச் மாதம் ஏழு­ம­லை­யா­னைத் தரி­சிக்­கும் பக்­தர்­கள் எண்­ணிக்கை 3,000க்கு குறைக்­கப்­பட்­டது. இத­னால் குறைந்த அள­வில் பக்­தர்­கள் தரி­ச­னத்­திற்கு வந்­த­னர். இத­னால் திருப்­பதி தேவஸ்­தா­னத்­திற்கு ரூ.5 முதல் 10 லட்­சம் வரை மட்­டுமே தின­மும் வரு­வாய் கிடைத்து வந்­தது. மேலும் பக்­தர்­கள் தங்­கும் அறை வாட­கை­கள், லட்டு விற்­பனை உள்­ளிட்ட இதர வரு­வாய்­கள் வெகு­வா­கப் பாதிக்­கப்­பட்­டன.

தற்­போது கிரு­மித்தொற்று குறைந்­துள்­ள­தால் பக்­தர்­க­ளின் எண்­ணிக்­கை­யும் அதி­க­ரிக்­கப்­பட்டுள்ளன. ரூ.300 கட்­ட­ணத்­தில் 8,000 தரி­சன நுழை­வுச் சீட்­டு­களும் 8,000 இல­வச தரி­சன நுழை­வுச் சீட்­டு­களும் வெளி­யி­டப்­பட்டு தின­மும் 30,000 பக்­தர்­கள் வரை அனு­ம­திக்­கப்­ப­டு­கின்­ற­னர். இத­னால் திருப்­ப­தி­யில் தரி­ச­னத்­திற்கு வரும் பக்­தர்­க­ளின் எண்­ணிக்கை நாளுக்கு நாள் கணி­ச­மாக உயர்ந்து வரு­கிறது.

கடந்த 25ஆம் தேதி ரூ.2.53 கோடி­யும் 26ஆம் தேதி ரூ.2.66 கோடி­யும் 27 ஆம் தேதி ரூ.2.90 கோடி­யும் கிடைத்­தது.

இதற்கு மறுநாள் 28ஆம் தேதி 27,167 பேர் தரி­ச­னம் செய்­த­னர். ரூ.2.95 கோடி உண்­டி­யல் வரு­வா­யாக கிடைத்­தது. ஓர் ஆண்­டிற்குப் பிறகு உண்­டி­யல் வரு­மா­னம் மீண்­டும் ரூ.3 கோடி அள­விற்கு அதி­க­ரித்­துள்­ளது.

அடுத்த மாதம் 7ஆம் தேதி முதல் 15ஆம் வரை பிரம்­மோற்­சவ விழா நடை­பெ­று­கிறது.

இதற்­கி­டையே ஒரு லட்ச ரூபாய் செல­வில் விமா­னத்­தில் அழைத்­துச் சென்று ஏழு­ம­லை­யான் தரி­ச­னத்­துக்கு ஏற்­பாடு செய்­தவதாகக் கூறிய பயண நிறுவனம் குறித்து தேவஸ்தானம் எச்சரித்துள்ளது.