நவ்ஜோத் சித்து: கடைசி மூச்சு உள்ளவரை போராடுவேன்

நவ்ஜோத் சித்து: கடைசி மூச்சு உள்ளவரை போராடுவேன்

2 mins read
18df1502-b361-40f4-951d-5ebc735541e2
இம்மாதம் 22ஆம் தேதி எடுக்கப்பட்ட படத்தில் பஞ்சாப் முதல்வராக பொறுப்பு ஏற்ற சரண்ஜித் சிங் சன்னியுடன் நவ்ஜோத் சிங் சித்து. தன்னைக் கலந்து ஆலோசிக்காமல் புதிய அமைச்சரவை அறிவிக்கப்பட்டதால் அதிருப்தி அடைந்ததாகக் கூறப்படும் நவ்ஜோத் சித்து மாநில காங்கிரஸ் தலைவர் பொறுப்பிலிருந்து விலகினார். கோப்புப் படம்: ஏஎஃப்பி -

புது­டெல்லி: பஞ்­சாப் மாநில காங்­கி­ரஸ் கட்­சி­யில் பல்­வேறு அதி­ரடி மாற்­றங்­க­ளுக்கு கார­ண­மான அக்­கட்­சி­யின் மாநி­லத் தலை­வர் நவ்ேஜாத் சித்து உச்­சக்­கட்­ட­மாக காங்­கி­ரஸ் கட்­சி­யின் மாநி­லத் தலை­வர் பத­வி­யி­லி­ருந்து வில­கி­னார்.

அவ­ருக்கு எதி­ராக கட்­சி­யி­னர் பல்­வேறு குற்­றச்­சாட்­டு­களை கூறி வரும் வேளை­யில் உண்­மைக்­காக இறுதி மூச்சு வரை போரா­டு­வ­வேன் என்று சூளு­ரைத்­துள்­ளார்.

டுவிட்­ட­ரில் வெளி­யிட்ட நீண்­ட­தொரு காணொ­ளி­யில் தான் தன்­னு­டைய தார்­மீக உரி­மை­களை விட்­டுக்கொடுக்­கப்போவ­தில்லை என்று நவ்ேஜாத் சித்து கூறி­யுள்­ளார்.

"யார் மீதும் தனிப்­பட்ட விரோ­தம் கிடை­யாது. மாற்­றத்தை ஏற்­ப­டுத்த வேண்­டும், மக்­க­ளின் வாழ்க்­கையை மேம்­ப­டுத்த வேண்­டும் என்ற நோக்கத்தில் 17 ஆண்­டு ­க­ளாக அர­சி­ய­லில் இருந்து வரு­கி­றேன். இது­தான் என்­னு­டைய சம­யம்," என்று அவர் தெரி­வித்­தார்.

பஞ்­சாப் மாநி­லக் காங்­கி­ரஸ் தலை­வ­ராக நவ்­ஜோத் சித்து பொறுப்பு ஏற்­ற­தி­லி­ருந்து உள்­கட்சி பூசல் வலுத்து வந்தது.

அம்­மா­நி­லத்­தில் காங்­கி­ர­சின் முதல்­வ­ராக இருந்த அம­ரிந்­தர் சிங் தடா­ல­டி­யாக பதவி வில­கி­னார்.

இதை­ய­டுத்து நவ்­ஜோத் சிங் முதல்­வ­ராக நிய­மிக்­கப்­ப­டு­வார் என பெரி­தும் எதிர்­பார்க்­கப்­பட்­டது.

ஆனால் அமைச்­ச­ராக இருந்த 58 வயது சரண்­ஜித் சிங் சன்­னியை அப்­பொ­றுப்­புக்கு காங்­கி­ரஸ் தலைமை நிய­மித்­தது.

அப்­போது புதிய அமைச்­ச­ர­வை­யில் நவ்­ஜோத் சிங்­கின் ஆத­ர­வா­ளர்­க­ளுக்கு இடமளிக்கப்பபடும் என்று பேசப்பட்டது.

அதி­லும் நவ்­ஜோத் சித்­து­வுக்கு ஏமாற்­றமே ஏற்­பட்­டது. இதை­ய­டுத்து காங்­கி­ரஸ் தலை­வர் பத­வி­யி­ல் ­இருந்து அவர் வில­கி­னார்.

முதல்­வர் பத­வி­யி­லி­ருந்து வில­கிய அம­ரிந்­தர் சிங்­கும் பஞ்­சாப் மாநில காங்­கி­ரஸ் தலை­வர் பத­வி­யி­லி­ருந்து வில­கிய நவ்­ஜோத் சித்­து­வும் பாஜ­க­வுக்­குத் தாவ­லாம் என்று ஊகிக்­கப்­ப­டு­கிறது. ஆனால் இதனை இரு­வ­ரும் மறுத்­துள்­ள­னர்.

இதற்­கி­டையே பிரச்­சி­னை­யைப் பேசித் தீர்த்­துக்கொள்­வோம் என்று நவ்­ஜோத் சித்­து­வுக்கு புதிய முதல்­வ­ரான சரண்­ஜித் சிங் அழைப்பு விடுத்­துள்­ளார்.

சித்­து­வு­டன் தொலை­பே­சி­யில் பேசி­ய­தா­கக் கூறிய அவர், "எது­வும் உள்­நோக்­கத்­து­டன் செய்­யப்­ப­ட­வில்லை. அரசு அைமப்பு நிய­ ம­னங்­களில் ஆட்­சே­பணை இருந்­தால் தெரி­விக்­க­லாம். நான் பிடி­வா­தம் பிடிக்க மாட்­டேன். எனக்­குக் கட்­சி­தான் முக்­கி­யம். பேசிப் பிரச்­சி­னை­க­ளைத் தீர்த்­துக் கொள்­ள­லாம் என்று அவ­ரி­டம் கூறி­னேன்," என்­றார்.