பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் 8ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர் களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு, கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இயங்கி வருகின்றன. இந்த நிலையில் பெங்களூரு அருகே ஆனேக்கல் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பயிலும் மாணவர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து அந்த பள்ளி விடுதியில் தங்கியிருந்த 400க்கும் மேற்பட்ட மாணவர்கள், ஆசிரியர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 60 மாணவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.

