மதிய உணவுத் திட்டம் இனி 'பிஎம் போஜன்'

2 mins read
f5b87fd8-baaf-49e6-8ae1-9c93baf59310
தற்போதுள்ள மாணவர்களுக்கான மதிய உணவுத் திட்டத்தை 'பிஎம் போஜன்' என்ற பெயரில் செயல்படுத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. படம்: ஸி இந்துஸ்தான் தமிழ் -

புது­டெல்லி: பள்ளி மாண­வர்­க­ளுக்­கான மதிய உண­வுத் திட்­டம் இனி 'பிஎம் போஜன்' என்று அழைக்­கப்­படும் என்று மத்­திய அரசு அறி­வித்­துள்­ளது.

அரசு மற்­றும் அரசு உதவி பெறும் பள்­ளி­களில் இந்­தத் திட்­டத்தை செயல்­ப­டுத்த மத்­திய அமைச்­ச­ரவை ஒப்­பு­தல் அளித்­துள்­ளது.

பொரு­ளி­யல் விவ­கா­ரங்­க­ளுக்­கான மத்­திய அமைச்­ச­ர­வைக் கூட்­டம் பிர­த­மர் நரேந்­திர மோடி தலை­மை­யில் டெல்­லி­யில் புதன்­கி­ழமை நடை­பெற்­றது என்­றும் அதில் மதிய உணவுத் திட்­டம் குறித்து பல்­வேறு முடி­வு­கள் எடுக்­கப்­பட்­டது என்­றும் 'ஸி இந்­துஸ்­தான் தமிழ்' ெவளி­யிட்ட தக­வல் தெரி­வித்­தது.

இந்­தக் கூட்­டத்­தில் அமைச்­சர்­கள் நிர்­மலா சீதா­ரா­மன், பியூஷ் கோயல் உட்­பட பலர் கலந்து கொண்­ட­னர்.

பின்­னர் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய மத்­திய அமைச்­சர் பியூஷ் கோயல், அரசு மற்­றும் அரசு உதவி ­பெ­றும் பள்­ளி­களில் 'பிஎம் போஜன்' என்ற பெய­ரில் மதிய உணவுத் திட்­டத்தைச் செயல்­ப­டுத்த மத்­திய அமைச்­ச­ரவை ஒப்­பு­தல் அளித்­துள்­ளது என்றார். தற்­போது பள்­ளி­களில் நடை­மு­றை­யில் இருக்­கும் தேசிய மதிய உண­வுத் திட்­டத்­திற்குப் பதி­லாக இந்த திட்­டம் செயல்­ப­டுத்­தப்­படும். இந்­தத் திட்­டத்­திற்கு அடுத்த ஐந்து ஆண்­டு­களில் ரூ. 1,30,795 கோடி செல­வி­டப்­பட உள்­ளது என்று மேலும் அவர் தெரிவித்தார்.

இதற்கிடையே 'பிஎம் போஜன்; திட்டம் தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் நாடு முழுவதும் 11.2 லட்சத்துக்கும் மேற்பட்ட பள்ளிகளில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு 'பிஎம் போஜன்' திட்டம் செயல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இதன் மூலம் 11.8 கோடி மாணவர்கள் பயனடைவர். இந்தத் திட்டத்தின் மொத்த செலவு ரூ. 1,30,794 கோடியாக இருக்கும்.