காங். தலைமையை குறைகூறிய கபில் சிபலுக்கு கடும் எதிர்ப்பு

1 mins read
6dec70ea-0398-4208-bd0f-bc4f60ffb145
கபில் சிபல். கோப்புப் படம்: இந்திய ஊடகம் -

புதுெடல்லி: காங்­கி­ரஸ் தலை­மையைக் கடு­மை­யாக விமர்­சித்த அக்­கட்சியின் மூத்த தலை­வர்­களில் ஒருவரான கபில் சிப­லுக்கு கடும் எதிர்ப்பு கிளம்­பி­யுள்­ளது.

அவ­ரது வீட்டு முன்பு கூடிய தொண்­டர்­கள், விரை­வில் கட்­சியை விட்டு வெளி­யே­றுங்­கள் என்று முழக்­க­மிட்­ட­னர்.

பஞ்­சாப் மாநி­லத்­தில் காங்­கி­ரஸ் கட்­சி­யில் ஏற்­பட்ட உட்­கட்சி பூசல் கார­ண­மாக முதல்­வர் மாற்­றப்­பட்­டார். இந்­தப் பர­ப­ரப்பு அடங்­கு­ வத­ற்­குள் அக்­கட்­சி­யின் மாநி­லத் தலை­வ­ரான நவ்­ஜோத் சித்து பதவி வில­கி­னார்.

இது குறித்து கருத்து தெரி­வித்த மூத்த காங்­கி­ரஸ் தலை­வ­ரான கபில் சிபல், "காங்­கி­ரஸ் கட்­சிக்கு தற்­போது தலை­வர்­கள் என்று யாரும் இல்லை. முடி­வு­களை எல்­லாம் யார் எடுக்­கி­றார்­கள் என்று தெரி­ய­வில்லை. பஞ்­சாப் காங்­கி­ரஸ் தலை­வர்­கள் ஒற்­று­மை­யாக இருப்­பதை உறுதி செய்ய வேண்­டும். காங்­கி­ர­சில் இருந்து சென்­ற­வர்­கள் மீண்­டும் கட்­சிக்குத் திரும்ப வேண்­டும், அப்­போ­து­தான் நாட்டை காப்­பாற்ற முடி­யும்," என்று கூறி­யி­ருந்­தார்.

காங்­கி­ரஸ் கட்­சிக்கு இன்­ன­மும் தலை­வரைத் தேர்வு செய்­யா­ததை அவர் மறை­மு­க­மாக விமர்­சித்­தி­ருந்­தார். இது காங்­கி­ரஸ் கட்­சித் தொண்­டர்­க­ளி­டையே கொதிப்பை ஏற்­ப­டுத்­தி­யது. அவர்­கள் கபில் சிபல் வீட்­டிற்குமுன் கூடி போராட்­டத்­தில் ஈடு­பட்­ட­னர். கட்­சியைவிட்டு வெளி­யே­றுங்­கள் என்று தொண்­டர்­கள் முழக்­க­மிட்டனர். தக்­காளிப் பழங்­களை அவ­ரது வீட்டை நோக்கி வீசி­னர். இதில் அவ­ரது கார் சேத­ ம­டைந்­த­தாகத் தெரி­கிறது.