செய்திக்கொத்து

செய்திக்கொத்து

1 mins read
8057bd5a-8761-42b4-b4c0-c227c5091186
-

மம்தாவுக்கு சோதனை

கோல்­கத்தா: மேற்கு வங்க மாநில முதல்­வர் மம்தா பானர்ஜி போட்­டி­யி­டும் தொகு­தி­யில் நேற்று வாக்­குப்பதிவு நடை­பெற்­றது. இதில் வெற்றி பெற்­றால்­தான் அவர் முதல்­வர் பத­வி­யில் நீடிக்க முடி­யும்.

கடந்த மே மாதம் நடந்த சட்­ட­மன்­றத் தேர்­த­லில் நந்­தி­கி­ராம் தொகு­தி­யில் போட்­டி­யிட்ட மம்தா பானர்ஜி, பார­திய ஜனதா வேட்­பா­ளர் சுவேந்து அதி­கா­ரி­யி­டம் தோல்வி அடைந்­தார். இந்நிலையில் பவா­னி­பூர் இடைத்தேர்தலில் அவர் மீண்டும் போட்டியிடுகிறார்.

பவா­னி­பூர் தொகு­தி­யில் முதல்­வர் மம்­தாவை எதிர்த்து காங்­கி­ரஸ் கட்சி வேட்­பா­ளரை நிறுத்­த­வில்லை. பார­திய ஜனதா கட்சி சார்­பில் பிரி­யங்கா திப்­ரே­வால் நிறுத்­தப்­பட்­டுள்­ளார்.

ஏர் இந்தியாவை வாங்கும்

போட்டியில் டாடாவுக்கு வாய்ப்பு

புதுடெல்லி: இந்திய அரசின் விமான நிறுவனமான 'ஏர் இந்தியா' தொடர்ந்து வருவாய் இழப்பை சந்தித்து வருகிறது. இதனால் அந்த நிறுவனத்தை விற்கும் முயற்சியில் அரசு இறங்கியுள்ளது. ஆரம்பத்தில் ஏர் இந்தியாவை வாங்க எந்த நிறுவனமும் முனைப்பு காட்டாத நிலையில் டாடா குழுமமும் ஸ்பைஸ் ஜெட் நிறுவனமும் ஏர் இந்தியாவை வாங்க முன்வந்தன.

இந்த நிலையில் ஏர் இந்தியா விமான நிறுவனத்தை வாங்க டாடா குழுமும் தீவிரம் காட்டி வருவதாகக் கூறப்படுகிறது. அந்த குழுமத்துக்கே வெற்றி கிடைக்கும் வாய்ப்பு உள்ளது என்று ஏர் இந்தியாவின் முன்னாள் இயக்குநர் ஜிதேந்தர் பார்கவா கூறியுள்ளார்.