செய்திக்கொத்து

3 mins read
f32f12fe-56da-462c-aa11-3d5b36b7a890
-

எட்டு முக்கிய துறைகளின் உற்பத்தி 11.6 விழுக்காடு அதிகரிப்பு

புதுடெல்லி: கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் கடந்த ஆகஸ்ட் மாதம் எட்டு முக்கிய துறைகளின் உற்பத்தி 11.6 விழுக்காடு அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, சுத்திகரிப்பு பொருள்கள், உரம், உருக்கு, சிமெண்ட், மின்சாரம் ஆகியவை இந்த வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில், நடப்பாண்டில் அதே காலகட்டத்தில் உற்பத்தி 11.6 விழுக்காடு அதிகரித்துள்ளது. மேலும் கடந்த மூன்று மாதங்களாக இந்த மூன்று துறைகளும் தொடர்ந்து உற்பத்தியை அதிகரித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

காங்கிரசில் இருந்து விலகுவதாக அறிவித்தார் அமரீந்தர் சிங்

சண்டிகர்: பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அண்மையில் டெல்லி சென்ற அவர், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகிய இருவரையும் சந்தித்துப் பேசினார். இதையடுத்து காங்கிரசில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ள அவர், தாம் பாஜகவில் சேரப்போவதாக வெளியான தகவல் உண்மையல்ல என்றார். "காங்கிரசில் தொடர்ந்து நீடிக்க விரும்பவில்லை. எனது ஆதங்கத்தை காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கேட்கத் தவறிவிட்டனர்,'' என்றார் அமரீந்தர் சிங். அவர் புதிய கட்சி தொடங்குவார் என்றும் அடுத்த தேர்தலில் அவர் பாஜகவுடன் கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளதாகவும் அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

அதானி குழுமத்தின் அன்றாட வருவாய் ரூ.1,002 கோடி

மும்பை: அதானி குழுமம் அன்றாடம் சுமார் ரூ.1,002 கோடி வருமானம் ஈட்டும் தகவல் வெளியாகி உள்ளது. 2020-2021ம் ஆண்டுக்கான இந்திய பணக்காரர்களின் பட்டியலை 'ஹுரான் இந்தியா' என்ற நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில், அதானி நிறுவனத்தின் தலைவர் கவுதம் அதானி (59 வயது), அவரது குடும்பத்தார் சார்ந்த தொழில் நிறுவனங்களின் சொத்து மதிப்பு 2020- 2021ம் ஆண்டில் 5.06 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிறுவனங்கள் கடந்த ஆண்டு தினந்தோறும் ரூ.1,002 கோடி வருவாய் ஈட்டியதாகவும் இதன் வழி நாட்டின் இரண்டாவது பெரிய பணக்கார குடும்பம் என்ற பெருமையைப் பெற்றுள்ளதாகவும் 'ஹுரான் இந்தியா' தெரிவித்துள்ளது. மேலும், ஆசியாவின் இரண்டாவது பணக்காரராகவும் அதானி உருவெடுத்துள்ளார்.

மாவட்டந்தோறும் மருத்துவக் கல்லூரி

புது­டெல்லி: நாடு முழு­வ­தும் மாவட்­டத்­துக்கு ஒரு மருத்­துவ கல்­லூரி அமைக்­கப்­படும் என்­று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். வலி­மை­யான மருத்­துவ கட்­ட­மைப்பை நோக்கி இந்­தியா நகர்ந்து கொண்­டி­ருப்பதாக அவர் நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது குறிப்பிட்டார். "முன்பு ஆறு எய்ம்ஸ் மருத்­து­வ­ம­னை­கள் மட்­டுமே இருந்­தன. இப்­போது அவற்­றின் எண்­ணிக்கை 22ஆக அதி­க­ரித்­துள்­ளது. "கடந்த 2014ஆம் ஆண்டு நாடு முழு­வ­தும் இள­நிலை, முது­நிலை மருத்­துவப் படிப்­பு­களில் சுமார் 82 ஆயி­ரம் இடங்­கள் இருந்­தன. தற்­போது 140,000 ஆயி­ரம் இடங்­கள் உள்­ளன," என்­றார் பிர­த­மர் மோடி. கடந்த ஆறு, ஏழு ஆண்­டு­களில் புதி­தாக 170 மருத்­துவ கல்­லூ­ரி­கள் திறக்­கப்­பட்­டுள்­ள­தா­கக் குறிப்­பிட்ட அவர், மேலும் நூறு புதிய மருத்­துவ கல்­லூ­ரி­களை அமைப்­ப­தற்­கான பணி­கள் வேக­மாக நடந்து வரு­வ­தா­கத் தெரி­வித்­தார். "நாடு முழு­வ­தும் மாவட்­டத்­துக்கு ஒரு மருத்­துவ கல்­லூரி இருப்­பதை உறுதி செய்ய முயற்­சி­கள் எடுக்­கப்­பட்டு வரு­கின்­றன," என்­றார் பிர­த­மர் மோடி.