ஏர் இந்தியா விற்பனை: மத்திய அரசு விளக்கம்

ஏர் இந்தியா விற்பனை: மத்திய அரசு விளக்கம்

1 mins read
725b56d1-2647-40a0-8f07-36e692b16f10
-

புது­டெல்லி: ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா சன்ஸ் நிறுவனம் வாங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக ஊடகங்களில் வெளியான தகவல் தவறானது என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

கடன் சிக்கலில் மூழ்கியுள்ள ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்க டாடா சன்ஸ் நிறுவனம் விருப்பம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், மத்திய அரசு இதற்கு ஒப்புதல் அளித்துள்ளதாக வெளியான தகவலை அதன் முதலீடு, பொது சொத்து மேலாண்மைத் துறை மறுத்துள்ளது.

ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா சன்ஸ் நிறுவனம் வாங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக ஊடகங்களில் வெளியான தகவல் தவறானது என்றும் அத்துறையின் செயலாளர் டுவிட்டர் பதிவு ஒன்றில் தெளிவுபடுத்தி உள்ளார்.

மேலும், ஏர் இந்தியா விற்பனை குறித்து எடுக்கப்படும் முடிவு குறித்து ஊடகங்களுக்கு பின்னர் தெரிவிக்கப்படும் என அத்துறை கூறியுள்ளது. ஏர் இந்தியாவை வாங்குவதில் பெரிய நிறுவனங்கள் பல ஆர்வம் காட்டவில்லை.