பிரிட்டிஷ் பயணிகளும் பத்து நாள்கள் தனிமைப்படுத்தப்படுவர்: இந்தியா பதிலடி

பிரிட்டிஷ் பயணிகளும் பத்து நாள்கள் தனிமைப்படுத்தப்படுவர்: இந்தியா பதிலடி

1 mins read
d3cd1661-9ce6-43a7-992b-41629f2f39c4
-

புது­டெல்லி: பிரிட்­ட­னில் இருந்து இந்­தி­யா­வுக்கு வரு­ப­வர்­கள் கொரோனா தடுப்­பூசி போட்­டுக் கொண்­டி­ருந்­தா­லும் பத்து நாள்­கள் கட்­டாய தனி­மைப்­ப­டுத்­தல் நட­வ­டிக்­கைக்கு உட்­ப­டுத்­தப்­ப­டு­வர் என அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இந்­தி­யா­வில் இருந்து பிரிட்­டன் வரு­வோர் தடுப்­பூசி போட்­டி­ருந்­தா­லும், விமான நிலை­யத்­தில் கொரோனா பரி­சோ­த­னைக்கு உட்­ப­டுத்­தப்­ப­டு­வர் என்று அந்­நாட்டு அரசு அண்­மை­யில் அறி­வித்­தது.

இதற்கு இந்­தியா எதிர்ப்பு தெரி­வித்த போதும், பிரிட்­டன் அரசு தன் முடிவை மாற்­றிக்­கொள்­ள­வில்லை.

இதை­ய­டுத்து இவ்­வி­வ­கா­ரத்­தில் பிரிட்­ட­னுக்குப் பதி­லடி கொடுத்­துள்­ளது இந்­தியா. நாளை முதல் இங்­கி­லாந்­தில் இருந்து வரு­ப­வர்­கள் பத்து நாள்­கள் கட்­டா­யத் தனி­மைப்­ப­டுத்­தல் நட­வ­டிக்­கைக்கு உட்­ப­டுத்­தப்­ப­டு­வர் என இந்­திய அரசு அறி­வித்­துள்­ளது.

கொரோனா தடுப்­பூசி போட்­டுக் கொண்­டி­ருந்­தா­லும், இங்­கி­லாந்து குடி­மக்­கள் இந்­தி­யா­வுக்குப் பய­ணம் மேற்­கொள்­ளும் 72 மணி­நே­ரங்­க­ளுக்கு முன்பு பரி­சோ­தனை செய்து கொரோனா தொற்று இல்லை என்­ப­தற்­கான சான்­றி­த­ழைப் பெற வேண்­டும் என அறி­வித்­துள்­ளது.

பிரிட்­டன் அரசு இந்­திய பய­ணி­க­ளுக்கு விதித்­துள்ள பய­ணக் கட்­டுப்­பா­டு­கள் அனைத்­தை­யும் இந்­திய அரசு பிரிட்­டன் பய­ணி­க­ளுக்கு விதித்­துள்­ளது.

இதற்­கி­டையே இந்­தி­யா­வில் 1.4 மில்­லி­யன் கர்ப்­பி­ணிப் பெண்­கள் கொரோனா தடுப்­பூசி போட்­டுக் கொண்­டுள்­ள­தாக மத்­திய சுகா­தார அமைச்சு தெரி­வித்­துள்­ளது. இவர்­களில் பெரும்­பா­லா­ன­வர்­கள் ஒரு தடுப்­பூசி போட்­டுக்கொண்­டுள்­ள­னர்.

இந்­தி­யா­வில் ஆண்­டு­தோ­றும் 26 மில்­லி­யன் பெண்­கள் கர்ப்­பம் தரிக்­கி­றார்­கள் என்­றும் அந்த எண்­ணிக்­கை­யு­டன் ஒப்­பி­டு­கை­யில், தடுப்­பூசி போட்­டுக்கொண்­ட­வர்­கள் எண்­ணிக்கை குறை­வு­தான் என்­றும் இந்­திய மருத்­துவ ஆய்­வுக் கழ­கத்­தின் ஆலோ­ச­க­ரான பேரா­சி­ரி­யர் சுனீலா கார்க் கூறி­யுள்­ளார்.