மூன்று செயற்கைக் கோள்கள்: இஸ்ரோ திட்டம்

1 mins read
cf757350-451e-4cb5-96d8-bc1789a4d82b
சிவன். படம்: ஊடகம் -

பெங்களூரு: நடப்பு ஆண்டின் இறுதிக் காலாண்டில் பூமியை கண்காணிக்கும் மூன்று முக்கிய செயற்கைக் கோள்கள் ஏவப்பட உள்ளதாக இந்திய விண்வெளி ஆய்வுக் கழகத்தின் தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

மூன்றிலும் உள்நாட்டுத் தொழில்நுட்பங்கள் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

செயற்கைக்கோள்களை ஏவுவதில் எந்தவித தவறும் நிகழ்ந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருப்பதாகவும் தொழில்நுட்பக் கோளாறுகளை முன்கூட்டியே கண்டறியும் வகையில் விரிவான சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் சிவன் தெரிவித்தார்.

"செயற்கைக்கோள்களை கண்காணிக்கவும் தகவல்களைப் பரிமாற்றம் செய்யவும் பயன்படும் கருவி, பயண அலை குழாய் பெருக்கிகள் ஆகியவை உள்நாட்டுத் தொழில் நுட்பத்தின் உதவியோடு பயன்படுத்தப்பட்டுள்ளன," என்று சிவன் மேலும் கூறியுள்ளார்.