தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் 7 ஆடை தொழிற்பேட்டைகள்

தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் 7 ஆடை தொழிற்பேட்டைகள்

1 mins read
7a30a143-9243-494a-9443-fa41874786c3
-

புது­டெல்லி: இந்­தியா முழு­வ­தும் 4,445 கோடி ரூபாய் மதிப்­பி­லான ஏழு பெரும் துணி, ஆடை தொழிற்­பேட்­டை­களை அமைக்க மத்­திய அமைச்­ச­ரவை ஒப்­பு­தல் அளித்­தது.­

பெரும் துணி, ஆடை தொழிற்­பேட்­டை­களை அமைப்­ப­தற்­கான பி.எம்.மித்ரா திட்­டம் நிதி­நிலை அறிக்­கை­யில் அறி­விக்­கப்­பட்­டது.

தமிழ்­நாடு, பஞ்­சாப், ஒடிசா, ஆந்தி­ரா, குஜ­ராத், ராஜஸ்­தான், அசாம், மத்­தி­யப்­பி­ர­தே­சம், தெலுங்­கானா ஆகிய மாநி­லங்­கள் அதில் நாட்­டம் தெரி­வித்தன.

அமைச்­ச­ரவைக் கூட்­டத்­திற்குப் பின் பேசிய மத்­திய அமைச்­சர் பியுஷ் கோயல், இதனால் 7 லட்­சம் நேரடி வேலை­வாய்ப்­பு­களும் மறை­மு­க­மாக 14 லட்­சம் வேலை­வாய்ப்­பு­களும் உரு­வா­கும் என்­றார்.