வெளிநாட்டு சுற்றுப் பயணிகளுக்கு கதவைத் திறக்கும் இந்தியா

இம்மாதம் 15ஆம் தேதியிலிருந்து வெளிநாட்டுப் பயணிகளுக்கு இந்தியாவின் கதவு திறக்கப்படுகிறது.
கொள்ளைநோய் காரணமாக கடந்த ஓராண்டாக இந்திய எல்லைகள் மூடப்பட்டிருந்தன.

உலகப்புகழ்பெற்ற தாஜ்மகால். மன்னர்களின் அரண்மனை, பிரபல கோயில்கள், வனவிலங்கு காப்பகம், யானை சரணாலயம், கடற்கரை உட்பட சுற்றுலா இடங்களுக்கு பயணிகள் செல்ல 2020 மார்ச் மாதத்திலிருந்து தடை விதிக்கப்பட்டது. அப்போதுதான் கிருமித்தொற்று பரவத் தொடங்கியது. இதனால் கடுமையான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன.

இவ்வாண்டின் தொடக்கத்தில் தொற்றுச் சம்பவங்கள் உச்சத்தை எட்டியது. தற்போது தொற்று எண்ணிக்கை குறைந்து வருகிறது. இந்நிலையில் பொருளியலுக்கு முக்கிய தூணாக விளங்கும் தொழில்துறையினர் அழுத்தம் கொடுத்து வருவதால் கட்டுப்பாடுகளைத் தளர்த்த அரசு முன்வந்துள்ளது.

இம்மாதம் 15ஆம் தேதியிலிருந்து சிறப்பு விமானங்களில் வரும் சுற்றுப்பயணிகளுக்கு சுற்றுலா விசா வழங்கப்படும் என்று உள்துறை அமைச்சு அறிவித்துள்ளது.

ஆனால் கிருமிப்பரவல் தடுப்பு நடைமுறைகளை சுற்றுப்பயணிகள் எல்லா நேரத்திலும் கடைப்பிடிக்க வேண்டும் என்று அது வலியுறுத்தியது.

இந்தியா, ஆரம்பத்தில் அனைத்து வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கும் தடை விதித்தது.
பின்னர் வர்த்தகர்கள், தூதர்கள் உள்ளிட்டவர்களுக்குப் படிப்படியாக கட்டுப்பாடுகளை தளர்த்தியது.
இருந்தாலும் விடுமுறையில் வருபவர்களுக்கு இந்தியா கதவை மூடியே வைத்திருந்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!