லக்னோ: குஜராத் முதல்வராகப் பொறுப்பேற்றபோது, நாட்டின் பிரதமராவது குறித்து தாம் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை எனப் பிரதமர் மோடி கூறியுள்ளார்.
மோடி பொதுச்சேவையில் ஈடுபடத் தொடங்கி இருபது ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளதை அடுத்து ஏராளமானோர் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
கடந்த 2001ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி, குஜராத் முதல்வராகப் பொறுப்பேற்றார் மோடி. அதன் பிறகு தொடர்ந்து 13 ஆண்டுகள் முதல்வர் பதவியில் நீடித்த அவர், 2014ஆம் ஆண்டு பிரதமராகப் பதவி ஏற்றார்.
"குஜராத்தி மக்களில் ஒருவனாக வாழ்ந்து வந்த வேளையில், 2001ஆம் ஆண்டு முதல்வர் என்ற புதிய பொறுப்பு கிடைத்தது. பிறகு நாட்டின் பிரதமர் ஆவேன் என்று நினைத்துக் கூட பார்க்கவில்லை," என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

