தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இந்திய கோடீஸ்வரர்கள் பட்டியலில் ஆறு பெண்கள்

1 mins read
c88b93ec-a89d-45dd-a371-72fa1bb27d98
-

புதுடெல்லி: இந்தியாவின் முதல் நூறு கோடீஸ்வரர்கள் பட்டியலில் இம்முறை ஆறு பெண்கள் இடம்பெற்றுள்ளனர்.

இந்தப் பட்டியலில் ஓபி ஜிண்டால் குழுமத்தின் சாவித்ரி ஜிண்டால் (71 வயது) ரூ.1.34 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் ஏழாம் இடத்தைப் பிடித்துள்ளார்.

ஹேவல்ஸ் நிறுவனத்தின் வினோத் ராய் குப்தாவுக்கு (76 வயது) 24ஆம் இடம் கிடைத்துள்ளது. அவரது சொத்து மதிப்பு ரூ.56,782 கோடியாகும்.

43 வயதான யுஎஸ்வி நிறுவனத்தின் லீனா திவாரி ரூ.32,874 கோடி சொத்து மதிப்புடன் 43ஆம் இடத்தில் உள்ளார்.

பைஜூஸ் நிறுவனத்தின் இணைநிறுவனரான திவ்யா கோகுல்நாத்துக்கு 35 வயதாகிறது. அவரது சொத்து மதிப்பு ரூ.30,265 கோடியாகும். கடந்த ஆண்டில் மட்டும் இவரது சொத்து மதிப்பு ரூ.7,477 கோடி அளவு உயர்ந்துள்ளது. இவர் 47ஆவது இடத்தில் உள்ளார்.

58 வயதான பயோகான் நிறுவனத்தின் கிரண் மஜூம்தார் ஷா 53ஆம் இடத்திலும், டாஃபே குழுமத்தின் மல்லிகா ஸ்ரீனிவாசன் ரூ.21,596 கோடி சொத்து மதிப்புடன் 73ஆம் இடத்திலும் உள்ளனர்.