தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

100 பில்லியன் பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி

1 mins read
81fdc34c-8101-47dc-b0fb-45a6ab296a34
-

மும்பை: உல­கப் பணக்­கா­ரர்­கள் பட்­டி­ய­லில் பெசோஸ், எலன் மஸ்க் ஆகி­யோ­ரு­டன் முகேஷ் அம்­பா­னி­யும் இணைந்­துள்­ளார்.

நூறு பில்­லி­யன் டால­ருக்­கும் மேல் சொத்து மதிப்பு உடை­ய­வர்­கள் மட்­டுமே இந்­தப் பட்­டி­ய­லில் இடம்­பெற முடி­யும்.

முகேஷ் அம்­பா­னி­யின் சொத்து மதிப்பு 100.60 பில்­லி­ய­னாக உள்­ளது. கடந்த வெள்­ளிக்­கி­ழமை அவ­ரது சொத்து மதிப்பு மேலும் அதி­க­ரித்­தது. நடப்­பாண்­டில் மட்­டும் அவ­ரது சொத்து மதிப்பு 23.8 பில்­லி­யன் டாலர் அதி­க­ரித்­தது.

64 வய­தான அம்­பா­னி­யின் சொத்து மதிப்பு அடுத்த இரு ஆண்­டு­களில் புதிய உச்­சத்தை தொடும் என பொரு­ளி­யல் நிபு­ணர்­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

இந்தப் பட்டியலில் எலன் மஸ்க் 222 பில்லியன் டாலருடன் முதலிடத்திலும், ஜெஃப் பெசோஸ் 190 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் இரண்டாம் இடத்திலும் உள்ளனர்.

முகேஷ் தலைமையிலான அம்பானி குழுமம் தொடர்ந்து லாபம் ஈட்டி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.