இந்தியில் பயிற்சி வகுப்பு: வெங்கடேசன் எம்பி எதிர்ப்பு

இந்தியில் பயிற்சி வகுப்பு: வெங்கடேசன் எம்பி எதிர்ப்பு

1 mins read
a1fe644d-c137-44f7-a9c7-3ccbb45ca939
-

மதுரை: பொதுக் காப்­பீட்டு நிறு­வ­னம் புதிய பணி­யி­டங்­களை நிரப்­பு­வ­தற்­கான தேர்­வுக்­கு­ரிய பயிற்­சியை இந்தி மொழி­யில் மட்­டும் நடத்­து­வதை ஏற்க இய­லாது என மதுரை நாடா­ளு­மன்­றத் தொகுதி உறுப்­பி­னர் சு.வெங்­க­டே­சன் கண்­ட­னம் தெரி­வித்­துள்ளா.

இது தொடர்­பாக அவர் நியூ இந்­தியா அஸ்­யூ­ரன்ஸ் நிறு­வ­னத்­தின் தலை­வ­ருக்கு கடி­தம் எழுதி உள்­ளார்.

அதில், 300 நிர்­வாக அலு­வ­லர் பணி­யி­டங்­க­ளுக்கு நடை­பெ­றும் தேர்­விற்­கான பயிற்சி வகுப்­பு­களை இந்­தி­யில் மட்­டுமே நடத்தி வரு­வது கண்­ட­னத்­திற்­கு­ரி­யது என்று அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

"தமி­ழ­கத்­தில் இருந்து ஆயி­ரக்­க­ணக்­கா­னோர் பயிற்சி வகுப்­பு­களில் பங்­கேற்­றுள்­ள­னர். அவர்­க­ளுக்கு எந்­த­வித பல­னும் இல்லை," என்று வெங்­க­டே­சன் எம்பி தெரி­வித்­துள்­ளார்.

எனவே தேர்­வுக்கு முன்­பாக தமி­ழ­கத்­தில் இருந்து விண்­ணப்­பித்­த­வர்­க­ளுக்கு என குறு­கிய கால பயிற்சி வகுப்­புக்கு ஏற்­பாடு செய்ய வேண்­டும் என்­றும் அவர் வலி­யு­றுத்தி உள்­ளார்.

"ஆங்­கில மொழி தாளுக்­கான பயிற்சி வகுப்­பும் கூட இந்­தி­யில்­தான் நடத்­தப்­பட்­டது. எனவே தேர்­வர்­க­ளுக்கு புரி­யும் மொழி­யில் பயிற்சி வகுப்­பு­களை நடத்­திட வேண்­டும். வரும் காலங்­களில் இத்­த­கைய நிகழ்­வு­கள் நேரா வண்­ணம் உறுதி செய்­திட வேண்­டும்," என்று சு.வெங்­க­டே­சன் எம்பி தமது கடி­தத்­தில் கூறியுள்ளார்.