மும்பை: உத்தரப் பிரதேசம் லகிம்பூர் வன்செயல்களைக் கண்டித்து மகாராஷ்டிராவில் ஆளும் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் சார்பில் முழு அடைப்பு போராட்டம் நேற்று நடந்தது.
மும்பை உள்ளிட்ட பல பகுதிகளில் வாகனப் போக்கு வரத்து முடங்கியதாகவும் சாலைகள் வெறிச்சோடியதாகவும் ஊடகத் தகவல்கள் கூறின.
மும்பையில் நேற்றுக் காலை 8 மணிவரை எட்டுப் பேருந்து கள் நொறுக்கப்பட்டதாகவும் பல இடங்களில் வன்செயல்கள் நடந் ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

