மோடி: தேவையற்ற பொதுத்துறை நிறுவனங்கள் தனியார்மயமாகும்

புது­டெல்லி: முன் எப்­போ­தும் இல்­லாத வகை­யில் இந்­தியா உறு­தி­யான அர­சாங்­கத்தைப் பெற்­றுள்­ளது என பிர­த­மர் மோடி தெரி­வித்­துள்­ளார்.

'தற்­சார்பு இந்­தியா' என்ற அர­சாங்­கத்­தின் தொலை­நோக்குப் பார்வை தெளி­வாக இருப்­ப­தால் நாட்­டில் சீர்­தி­ருத்­தங்­கள் சாத்­தி­ய­மாகியுள்ள­தாக அவர் குறிப்­பிட்­டார்.

தேவை­யற்ற பொதுத்­துறை நிறு­வ­னங்­களை தனி­யார்­ம­ய­மாக்­கு­வதே தமது அர­சின் கொள்கை என்று குறிப்­பிட்ட அவர், ஏற்­கெனவே நஷ்­டத்­தில் இயங்கி வந்த ஏர் இந்­தியா நிறு­வ­னத்தை வெற்றி­க­ர­மாக தனி­யார்­ம­ய­மாக்கி உள்­ள­தா­கச் சுட்­டிக்­காட்­டி­னார்.

இதே­போல மேலும் பல தேவை­யற்ற பொதுத்­துறை நிறு­வ­னங்­கள் தனி­யார்­ம­ய­மாக்­கப்­படும் என்­றார் பிர­த­மர் மோடி.

தேச நல­னை­யும் பல்­வேறு பங்கு­தா­ரர்­க­ளின் தேவை­யை­யும் கருத்­தில் கொண்டே மத்­திய அரசு செயல்­ப­டு­வ­தா­கக் குறிப்­பிட்ட அவர், அதன் கார­ண­மா­கவே விண்­வெளி முதல் பாது­காப்­புத்­துறை வரை பல துறை­களில் தனி­யா­ருக்­கான கத­வு­கள் திறக்­கப்­பட்­டுள்­ள­தா­கத் தெரி­வித்­தார்.

"இனி அர­சும் ஒரு கூட்­டா­ளி­யாக இருந்து, தொழில்துறை, இளம் கண்­டு­பி­டிப்­பா­ளர்­கள், புதிய நிறு­வ­னங்­கள் உரு­வாக தேவை­யான அனைத்து உத­வி­களையும் செய்­யும்," என்­றார் பிர­த­மர் மோடி.

உல­கின் மற்ற நாடு­க­ளு­டன் ஒப்­பி­டும்­போது இந்­தி­யா­வின் வலிமை எந்தவிதத்­தி­லும் குறைந்­தது அல்ல என்று குறிப்­பிட்ட பிரதமர், இதற்குத் தடை­யாக உள்­ள­வற்றை அகற்­று­வது அர­சின் பொறுப்பு என்­றார்.

"தற்­சார்பு இந்­தியா இயக்­கம் என்­பது வெறும் தொலை­நோக்­குப் பார்வை மட்­டு­மல்ல; அது நன்கு சிந்­திக்­கப்­பட்ட, நன்கு திட்­ட­மி­டப்­பட்ட, ஒருங்­கி­ணைக்­கப்­பட்ட பொரு­ளா­தார உத்தி," என்று பிர­த­மர் மோடி குறிப்­பிட்­டார்.

பொதுத்­துறை நிறு­வ­னங்­கள் தொடர்­பாக அரசு மேற்­கொள்­ளும் கொள்கை தெளி­வா­னது என்று குறிப்­பிட்ட பிர­த­மர் மோடி, அர­சின் தேவை அவ­சி­ய­மில்­லாத பெரும்­பா­லான துறை­கள் தனி­யா­ருக்­குத் திறந்­து­வி­டப்­படும் என்­றார்.

எனி­னும், பொதுத்­துறை நிறு­வ­னங்­களை தனி­யார்­ம­ய­மாக்­கு­வ­தற்கு எதிர்க்­கட்­சி­கள் கடும் எதிர்ப்பு தெரி­வித்து வரு­கின்­றன. பிர­த­மர் மோடி­யின் இத்­த­கைய முடி­வு­க­ளால் அவ­ருக்கு நெருக்­க­மான தொழி­ல­தி­பர்­கள் பல­ன­டை­வ­தா­க­வும் அவை விமர்­சித்­துள்­ளன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!