சீதாராம் யெச்சூரி: மக்கள் தலையில் ரூ.46,000 கோடி கடன்

புது­டெல்லி: தேசிய சொத்­து­களை பாஜக தலை­மை­யி­லான மத்­திய அரசு இடை­வி­டா­மல் கொள்­ளை­யடித்து வரு­வ­தாக மார்க்­சிஸ்ட் கம்­யூ­னிஸ்ட் பொதுச்­செ­ய­லா­ளர் சீதா­ராம் யெச்­சூரி சாடி உள்­ளார்.

டெல்­லி­யில் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய அவர், ஏர் இந்­தியா விற்­ப­னை­யால் மக்­கள் தலை­யில் ரூ.46 ஆயி­ரம் கோடி கடன் சுமத்­தப்­பட்­டுள்­ள­தா­கக் குறிப்­பிட்­டார்.

அண்­மை­யில் ஏர் இந்­தியா நிறு­வ­னத்தை டாடா குழு­மம் வாங்­கி­யுள்­ளது. மொத்­தம் ரூ.18,000 கோடிக்கு விற்­கப்­பட்­டா­லும், மத்­திய அர­சுக்கு இத­னால் பெரும் இழப்பு ஏற்­பட்­டுள்­ள­தாக ஒரு தரப்­பி­னர் தெரி­வித்­துள்­ள­­னர்.

"டாடா நிறு­வ­னத்­துக்கு ஏர் இந்­தியா ரூ.18 ஆயி­ரம் கோடிக்கு விற்­கப்­பட்­டுள்­ளது. இது, டாடா­வுக்கு மோடி அரசு அளிக்­கும் இல­வச பரிசு போன்­ற­து­தான். பட்­டப்­ப­க­லில் நெடுஞ்­சா­லை­களில் நடக்­கும் கொள்­ளையைப்போல் நடந்­துள்­ளது.

"டாடா நிறு­வ­னம் ரூ.15 ஆயி­ரத்து 300 கோடி கடனை ஏற்­றுக்­கொண்­டா­லும், அது மறு­சீ­ர­மைக்­கப்­பட்­டு­வி­டும். எனவே மீத­முள்ள ரூ.2,700 கோடியை மட்­டுமே மத்­திய அர­சுக்கு கொடுக்­கும்," என்­றார் சீதா­ராம் யெச்­சூரி.

ஏர் இந்­தி­யா­வின் மீதிக் கடன் ரூ.46,262 கோடியை மத்­திய அர­சு­தான் ஏற்க வேண்டி இருக்­கும் என்று சுட்­டிக்­காட்­டிய அவர், அந்­தக் கடன் தொகை­யா­னது பொது­மக்­கள் தலை­யில்­தான் சுமத்­தப்­படும் என்­றார். ஆனால், ஏர் இந்தியா வாங்­கிய சொத்­து­கள் எல்­லாம் டாடா நிறு­வ­னத்­துக்குச் சொந்­த­மா­கி­வி­டும் என்­றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!