லக்கிம்பூர் வன்முறை: காங்கிரஸ், விவசாயிகள் மீண்டும் போராட்டம்

லக்கிம்பூர் வன்முறை: காங்கிரஸ், விவசாயிகள் மீண்டும் போராட்டம்

1 mins read
3ed44c03-872e-4a86-931e-23d9bdb49ae2
-

லக்னோ: லக்­கிம்­பூர் வன்­முறை தொடர்­பாக மத்­திய அமைச்­சர் அஜய் மிஸ்­ரா­வைக் கைது செய்ய வலி­யு­றுத்தி விவ­சா­யி­கள் நேற்று அமைதி போராட்­டத்­தில் ஈடு­பட்­ட­னர். இதே வேளை­யில் காங்­கி­ர­சா­ரும் நாடு தழு­விய அள­வில் மௌனம் காக்கும் போராட்­டத்தை நடத்­தி­னர்.

லக்­கிம்­பூ­ரில் நடை­பெற்ற போராட்­டத்­தில் வெளி மாநி­லங்­களைச் சேர்ந்த நூற்­றுக்­க­ணக்­கான விவ­சா­யி­கள் பங்­கேற்­ற­தாக தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன. வன்­முறை­யில் கொல்­லப்­பட்ட விவ­சாயி­கள் குடும்­பத்­தா­ரும் பங்­கேற்­ற­னர்.

இதற்­கி­டையே, வன்­முறை தொடர்­பில் கைது செய்­யப்­பட்­டுள்ள இணை அமைச்­சர் அஜ்ய மிஸ்ரா­வின் மகன் ஆசிஷ் மிஸ்ராவை அக்­டோ­பர் 12 முதல் 15ஆம் தேதி வரை மூன்று நாள் போலிஸ் காவ­லில் எடுத்து விசா­ரிக்க நீதி­மன்­றம் அனு­மதி அளித்­துள்­ளது.

லக்­னோ­வில் நடை­பெற்ற மௌனம் காக்­கும் போராட்­டத்­தில் காங்­கி­ரஸ் பொதுச்­செ­ய­லா­ளர் பிரி­யங்கா காந்தி பங்­கேற்­றார். மத்­திய அமைச்­சர் அஜ்ய மிஸ்­ராவை பத­வி­யில் இருந்த நீக்க வலி­யு­றுத்தி லக்­னோ­வில் உள்ள காந்தி சிலை­யின் முன்பு அந்தப் போராட்­டம் நடை­பெற்­றது.

இந்­நி­லை­யில், வன்­முறை விவ­கா­ரம் தொடர்­பில் மத்­திய அமைச்­சரைப் பதவி நீக்­கம் செய்­யா­மல் பாஜக நீதி­யைத் தடுப்­ப­தாக ராகுல் காந்தி குற்­றம்­சாட்டி உள்­ளார்.