செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
cdf41d11-3546-4e0b-86ae-d1a583c865aa
-

வீடு வருவதாக கூறியவர் வீர மரணம் அடைந்து சடலமாக திரும்பிய சோகம்

சண்டிகர்: இரு தினங்களுக்குமுன் காஷ்மீரில் பயங்கரவாதி களுடனான மோதலில் வீரமரணம் அடைந்த பஞ்சாப்பைச் சேர்ந்த வீரர் ஜஸ்விந்தர் சிங் வரும் நவம்பர் மாதம் விடுமுறையில் ஊர் திரும்புவதாக கூறியிருந்தது தெரிய வந்துள்ளது. 39 வயதான அவருக்கு மனைவியும் 11, 13 வயதில் மகளும் மகனும் உள்ளனர். கடந்த ஆண்டு இவரது தந்தை காலமாகிவிட்டார். இதையடுத்து சில சடங்குகளைச் செய்ய விடுமுறையில் ஊருக்குச் செல்ல இருந்தார். இந்நிலையில், அவரே சடலமாக ஊர் திரும்பியதாக குடும்பத்தார் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளனர்.

திருப்பதியில் பசுவுக்கான கோவில் ரூ.15 கோடியில் அமைப்பு

திருப்பதி: திருப்பதி கோவில் அடிவாரத்தில் ரூ.15 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள பசுக்களுக்கான சிறப்புக் கோவிலை அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் திறந்து வைத்தார். இச்செலவை தமிழக தொழிலதிபர் ஒருவர் ஏற்றுக்கொண்டுள்ளார். இங்கு வைக்கப்பட்டுள்ள ஒரே கல்லில் செதுக்கப்பட்ட பசுவுடன் கூடிய கண்ணன் சிலை அனைவரையும் கவர்ந்துள்ளது.

'போக்சோ' வழக்குகளில் 99% பெண்களுக்கு எதிரானவை

புதுடெல்லி: போக்சோ சட்டத்தின்கீழ் குற்றம்சாட்டப்பட்ட வர்களுக்கு தூக்குத் தண்டனை விதிக்க வழியுள்ளபோதி லும், பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறைய வில்லை என தேசிய குற்ற ஆவணக் காப்பகம் கூறியுள் ளது. கடந்தாண்டு போக்சோ சட்டத்தின்கீழ் பதிவான 28,327 குற்றங்களில் 28,050 குற்றங்கள் பெண் குழந்தை களுக்கு எதிரானவை ஆகும். குறிப்பாக, 16 முதல் 18 வயதுள்ள பெண் குழந்தைகளுக்கு எதிராக கடந்தாண்டில் 14,092 குற்றங்களும் 12 முதல் 16 வயதுள்ள பெண் குழந் தைகளுக்கு எதிராக 10,499 குற்றங்களும் நடந்துள்ளன.

ஓராண்டாக பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பழங்குடியினப் பெண்

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் 'பில்' என்ற பழங்குடியினத்தைச் சேர்ந்த பதின்ம வயதுப் பெண் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். பிறகு அந்தப் பெண்ணுக்கு கர்ப்பத்தடை மாத்திரையும் வலுக்கட்டாயமாக வழங்கப்பட்டது. அப்பெண் ஆறு மாத கர்ப்பிணியாக இருப்பதாகவும் உயிருக்கு ஆபத்து இல்லை என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஜலவார் மாவட்டத்தில் வசிக்கும் அந்த இளம் பெண்ணை அவரது அண்டை வீட்டுக்காரர் கடந்த ஓராண்டாக வன்கொடுமைக்கு உட்படுத்தி உள்ளார்.