இந்தியா: தீவிரவாதத்துக்கு எதிராக உலக நாடுகள் இணைய வேண்டும்

புது­டெல்லி: தீவி­ர­வா­தத்­துக்கு எதி­ரா­கப் பாடு­பட அனைத்­து­லக நாடு­கள் கைகோக்க வேண்­டும் என்று இந்­திய வெளி­யு­ற­வுத் துறை அமைச்­சர் எஸ்.ஜெய்­சங்­கர் அழைப்பு விடுத்­துள்­ளார்.

கஜ­கஸ்­தான் தலை­ந­கர் நுர் சுல்­தா­னில் நேற்று ஆசி­யா­வில் தொடர்பு மற்­றும் நம்­பிக்­கையை உரு­வாக்­கும் நட­வ­டிக்கை அமைப்­பின் (சிஐ­சிஏ-சைகா) ஆறா­வது மாநாடு நடை­பெற்­றது. இதில் மத்­திய வெளி­யு­ற­வுத்­துறை அமைச்­சர் எஸ்.ஜெய்­சங்­கர் கலந்­து­கொண்டு உரை­யாற்­றி­னார்.

அனைத்து நாடு­களும் செழிப்­புற வேண்­டும். அதற்கு அங்கே அமை­தி­யான சூழல் நிலவ வேண்­டும். இதுவே இந்­தி­யா­வின் ஆசை. ஒரு நாட்­டின் இறை­யாண்மை மற்­றும் வட்­டார ஒரு­மைப்­பாட்­டுக்­கான மரி­யா­தையை அளிக்க அனைத்­து­லக நாடு­கள் தவ­றக்கூடாது.

அமை­தி­யும் வளர்ச்­சி­யும் நமது பொது­வான குறிக்­கோள் என்­றால், நாம் தீவி­ர­வா­தத்தை எதிர்த்து போராட வேண்­டும். அதுவே நமக்கு மிகப்­பெ­ரிய எதிரி.

எல்லை தாண்­டிய தீவி­ர­வா­தம் என்­பது தீவி­ர­வா­தத்­தின் மற்­றொரு வடி­வம் என்­பதை புரிந்து கொள்­ள­வேண்­டும். அனைத்­து­ல­கத் தீவி­ர­வா­தம் என்ற அரக்­க­னுக்கு எதி­ராக அனைத்து நாடு­களும் கைகோத்­துப் போராட இணக்­கம் காண­வேண்­டும்.

பரு­வ­நிலை மாற்­றம், கொரோனா பெருந்­தொற்­றுக்கு எதி­ராக உலக நாடு­கள் ஒன்­றி­ணைந்­தது போல, இந்­தப் பிரச்­சி­னை­யைத் தீர்க்­க­வும் அனைத்து நாடு­களும் ஒன்­றி­ணைய வேண்­டும். தீவி­ர­வா­தத்தை உல­கி­லி­ருந்து வேரோடு பிடுங்கி எறிய வேண்­டும்.

ஆப்­கான் நிலை­மையை உன்­னிப்­பா­கக் கவ­னித்து வரு­கி­றோம். ஆப்­கா­னிஸ்­தா­னின் வளர்ச்­சிக்கு சைகா அமைப்பு ஒரு நேர்­ம­றை­யான பங்கை வகிக்க முடி­யும் என்று நம்­பு­கி­றேன் என்­றார் அவர்.-பிடிஐ

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!