115 அனல் மின் நிலையங்கள் முடங்கும் நிலை

115 அனல் மின் நிலையங்கள் முடங்கும் நிலை

1 mins read
f4f965f8-a5de-4035-9b09-544cea785455
-

புதுடெல்லி: நாட்டில் நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக 115 மின் உற்பத்தி நிலையங்களை இயக்க முடியாமல் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக இந்திய மின்சார ஆணையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நாட்டில் உள்ள 135 அனல் மின் நிலையங்களில் 115 நிலையங்களில் நிலக்கரிக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

"இவற்றில் 17 நிலையங்களில் கொஞ்சம் நிலக்கரிக்கூட இருப்பு இல்லை. 26 நிலையங்களில் ஒருநாள் உற்பத்திக்கு மட்டுமே இருப்பு உள்ளது.

"இதனால் 115 அனல் மின் உற்பத்தி நிலையங்கள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது," என தெரிவித்துள்ளது.