'சிவப்பு விளக்கு எரிந்தால் வாகன இயக்கத்தை அணைக்கவும்'

'சிவப்பு விளக்கு எரிந்தால் வாகன இயக்கத்தை அணைக்கவும்'

1 mins read
ecf46a67-03dd-4d7e-9890-3e99ba9fe0b8
-

புது­டெல்லி: போக்­கு­வ­ரத்­துச் சமிக்ஞை விளக்­கு­களில் சிவப்பு விளக்கு எரிந்­தால் வாக­னங்­களை நிறுத்­து­வ­தோடு, அதன் இயக்­கத்­தை­யும் முழு­மை­யாக அணைத்து வைக்கவேண்­டும் என வாக­ன ஓட்டுநர்களுக்கு டெல்லி அரசு வேண்­டு­கோள் விடுத்­துள்­ளது.

இது தொடர்­பாக முக்­கிய அறி­விப்­பு­களை வெளி­யிட்­டுள்ள முதல்­வர் அர­விந்த் கெஜ்­ரி­வால்(படம்), "வாரத்­தில் ஒரு நாளா­வது வாக­னத்தைத் தவிர்த்து பொதுப் போக்­கு­வ­ரத்­தைப் பயன்­ப­டுத்த மக்­கள் உறு­தி­யேற்க வேண்­டும். மேலும், சமிக்ஞைகளில் சிவப்பு விளக்கு எரி­யும்போது, வாக­னங்­க­ளின் இயக்­கத்தை நிறுத்தி வைக்­கும் திட்­டம் வரும் 18ம் தேதி முதல் அம­லுக்கு வரு­கிறது. பொது­மக்­கள் இதைக் கடைப்­பி­டிக்க முன்­வர வேண்­டும்," என தெரி­வித்­துள்­ளார்.

இந்­தி­யா­வில் ஆண்­டு­தோ­றும் காற்று மாசு அதி­க­ரித்­துக்­கொண்டே வரு­கிறது. மேலும், இந்­தி­யா­வில் மக்­கள் சுவா­சிக்­கும் காற்­றி­லேயே அதி­க­ளவு மாசு கலந்­து­விட்­ட­தாக ஆய்வு ஒன்­றும் எச்­ச­ரிக்கிறது. இதை­ய­டுத்து காற்று மாசுவைக் குறைக்க மாநில அர­சு­கள் பல்­வேறு நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டு வரு­கி­ன்றன.