ஆர்யனுக்குப் பிணை இல்லை

2 mins read
8b561bf5-3697-42c7-83f5-e61ac64b68e3
-

மும்பை: நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கானை அக்டோபர் 20ஆம் தேதி வரை காவலில் வைக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது என்று என்டிடிவி தகவல்கள் தெரிவிக்கின்றன. அக்டோபர் 20க்குப் பிறகு அவரை பிணையில் விடுவிக்க முயற்சி செய்வதாக நீதிபதி வி.வி.படீல் கூறியுள்ளார். 23 வயது ஆர்யன் கான் அடுத்த ஐந்து நாட்களுக்குத் தொடர்ந்து சிறையில் இருப்பார், சிறப்பு ஏற்பாடுகள் இன்றி மற்ற சிறைக் கைதிகளுடன் அவர் அடைக்கப்படுவார் என்று இந்தியா டுடே தொலைக்காட்சி தெரிவித்தது. வீட்டிலிருந்து உடைகள் எடுத்துச் செல்ல அவருக்கு அனுமதி உண்டு என்றாலும் வெளி உணவு அவருக்கு மறுக்கப்பட்டுள்ளது.

டிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான் பிணை கோரிய மனு மீதான விசாரணை இன்று மீண்டும் நீதிமன்றத்தில் நடை பெற்றது. அப்போது, ஆர்யன் கான் தொடர்ந்து போதைப்பொருள் எடுத்துக்கொண்டதற்கான ஆதா ரங்கள் உள்ளதாக போதைப்பொருள் கட்டுப்பாட்டு அமைப்பு தெரிவித்தது.

ஆர்யன் கான் பிணையில் விடுதலையானால் அவர் ஆதா ரங்களை அழிக்க வாய்ப்பு உள்ளது என பிணை வழங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு அமைப்பு எதிர்ப்பு தெரிவித்தது.

மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் இன்று நடந்த விசா ரணையின்போது, ஆர்யன் போதைப் பொருளை கையில் வைத்திருக்க வில்லை என்றும் அவர் அதனை விலைகொடுத்து வாங்கவில்லை என்றும் வாங்குவதற்கு அவர் கையில் ரொக்கப் பணம் இல்லை எனவும் வாதிடப்பட்டது. அவருக்கும் போதைப் பொருள் விவகாரத்துக்கும் தொடர்பில்லை என்று வழக்கறிஞர் வாதாடினார். இதையடுத்து அரசுத் தரப்பு வாதங் களுக்காக நீதிமன்றம் இன்று 14ஆம் ேததிக்கு விசாரணையை ஒத்தி வைத்தது.

கார்டிலியா நிறுவனத்தின் சொகுசுக் கப்பல் ஒன்று கடந்த 2ஆம் தேதி மும்பையில் இருந்து கோவாவுக்கு சுற்றுலா புறப்பட்டது. இதில் என்சிபி அதிகாரிகளும் சாதாரண உடையில் பயணம் செய்தனர்.

கப்பலில் நடந்த கேளிக்கை விருந்தின்போது, போதைப்பொருள் பயன்படுத்தியதாக ஆர்யன் கான், 23, உள்ளிட்ட எட்டுப் பேரை பிடித்து விசாரித்தனர். இரண்டாம் கட்டமாக இந்த வழக்கில் மேலும் சிலரையும் கைது செய்தனர். இதுவரை இந்த வழக்கு தொடர்பாக மொத்தம் 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் ஆர்யன் கான் உள்ளிட்ட 8 பேரை அக்டோபர் 21 ஆம் தேதிவரை நீதிமன்றக் காவ லில் வைக்க மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் ஆர்யன் கான் தரப்பில் பிணை கோரப்பட்டது. ஆனால், இந்த வழக்கில் ஆர்யன் கானை முதன்மைக் குற்ற வாளியாக சேர்த்துள்ள என்சிபி, அவரை வெளியில்விட்டால் அவர் தனது அதிகாரமிக்க பின்புலத்தைப் பயன்படுத்தி சாட்சிகளைக் கலைத்துவிடுவார் என்று வாதிட்டது.