கருநாகம் தீண்டி மனைவி மரணம்; கணவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை

திரு­வ­னந்­த­பு­ரம்: கரு­நா­கத்தை விட்டு தீண்­ட­வைத்து மனை­வி­யின் உயி­ரைப் பறித்­துள்ள கண­வ­ருக்கு இரட்டை ஆயுள் தண்­டனை விதித்து கொல்­லம் நீதி­மன்­றம் தீர்ப்­ப­ளித்­துள்­ளது.

இந்த வழக்கு தொடர்­பில் சூரஜ் குற்­ற­வாளி என கொல்­லம் நீதி­மன்­றம் கடந்த திங்­க­ளன்று தீர்ப்பு கூறிய நிலை­யில், தண்­டனை விவ­ரங்­களை நீதி­பதி எம்.மனோஜ் நேற்று முன்­தி­னம் வழங்­கி­னார்.

தீர்ப்­பில் ருத்­ரா­வைக் கொலை செய்த சூரஜ்­ஜுக்கு இரட்டை ஆயுள் தண்­டனை விதித்­த­து­டன், ரூ.5 லட்­சம் அப­ரா­த­மும் விதித்­தார்.

விசா­ர­ணை­யில், பாம்பு பசி­யாக இருந்­தால் வெறித்­த­ன­மாக கடிக்­கும் என இணை­யத்­தில் தேடிக் கண்­டு­பி­டித்த சூரஜ் கரு­நா­கப்­பாம்பை ஏழு­நாட்­கள் பட்­டி­னி­யா­கப் போட்டு உத்­ரா­வைத் தீண்­ட­வைத்த விவ­ரம் தெரி­ய­வந்­தது.

இதற்­கி­டையே, மக­ளின் கொலை வழக்கு தீர்ப்­பில் திருப்தி இல்லை என்­றும் மக­ளைக் கொடூ­ர­மாக கொன்றவருக்கு தூக்­குத்­தண்­டனை வழங்­க­வேண்­டும் என்­றும் உயர் நீதி­மன்­றத்­தில் மேல்­மு­றை­யீடு செய்ய உள்­ள­தா­க­வும் உத்­ரா­வின் தாய் மணி­மே­கலை கூறியுள்­ளார்.

கேரள மாநி­லம், கொல்­லம் மாவட்­டம் அருகே அரூர் பகு­தி­யில் வசித்­த­வர் சூரஜ், 27. தனி­யார் வங்­கி­யில் பணி­பு­ரிந்து வந்த அவர் கடந்த இரு ஆண்­டு­க­ளுக்கு முன்­னர் உத்ரா, 25, என்ற பெண்­ணைத் திரு­ம­ணம் செய்­து­கொண்­டார்.

திரு­ம­ணத்­தின்­போது ருத்ரா வுக்கு 100 சவ­ரன் தங்க நகை­கள், பத்து லட்­சம் ரொக்­கப் பணம், மூன்­றரை ஏக்­கர் நிலம், கார் உள்­ளிட்­ட­வற்றை வர­தட்­ச­ணை­யாக அவ­ரது பெற்­றோர் வழங்­கி­யுள்­ள­னர்.

இந்த தம்­ப­தி­யி­ன­ருக்கு இரண்டு வய­தில் மக­னும் உள்­ளார்.

திரு­ம­ண­மான சில மாதங்­களி லேயே வேறு ஒரு பெண்ணை இரண்­டா­வது திரு­ம­ணம் செய்து கொள்­ளத் திட்­ட­மிட்ட சூரஜ், ருத்­ராவை கொல்ல இரு­முறை வீட்­டுக்­குள் பாம்பை விட்­டுள்­ளார்.

முதல்­முறை இவர் விட்ட அணலி என்ற பாம்பு ருத்­ரா­வின் காலில் கடிக்க, 40 நாட்­களில் அதிர்ஷ்ட வச­மாக அவர் உயிர்­பி­ழைத்­துள்­ளார். இதை­ய­டுத்து, பாம்­பாட்டி சுரே­ஷி­டம் ரூ.10,000 கொடுத்து கரு­நா­கப் பாம்பை வாங்கி மீண்­டும் ருத்ராவை தீண்ட விட்­டதை அடுத்து, ருத்ரா உயி­ரி­ழந்­தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!