அக்டோபர் 20ஆம் தேதி வரை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு ஆர்யன் கானுக்கு பிணை மறுப்பு

மும்பை: நடி­கர் ஷாருக் கானின் மகன் ஆர்­யன் கானை அக்­டோ­பர் 20ஆம் தேதி வரை காவ­லில் வைக்க மும்பை நீதி­மன்­றம் உத்தரவிட்டுள்ளதாக என்­டி­டிவி தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன. அக்­டோ­பர் 20க்குப் பிறகு அவரை பிணை­யில் விடு­விக்க முயற்சி செய்­வ­தாக நீதி­பதி வி.வி.படீல் கூறி­யுள்­ளார்.

இதனால் ஆர்­யன் கான் அடுத்த ஐந்து நாட்­க­ளுக்­குத் தொடர்ந்து சிறை­யில் இருப்­பார். சிறப்பு ஏற்­பா­டு­கள் இன்றி மற்ற சிறைக் கைதி­க­ளு­டன் அவர் அடைக்­கப்­பட்டிருப்பார் என்று இந்­தியா டுடே தொலைக்­காட்சி தெரி­வித்­தது. வீட்­டி­லி­ருந்து உடை­கள் எடுத்­துச் செல்ல அவ­ருக்கு அனு­மதி உண்டு என்­றா­லும் வெளி உணவு அவ­ருக்கு மறுக்­கப்­பட்­டுள்­ளது.

சிறையில் இருக்கும் ஆர்யன் கான், பார்ப்பதற்கு பதற்றமாகவும் கவலையாகவும் இருப்பதாகச் சிறையிலிருந்து தகவல் வந்ததாக இந்தியா டுடே தகவல் தெரிவித்தது. பாதுகாப்பு காரணமாக இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் பிரித்து வைக்கப்பட்டுள்ளனர்.

ஆர்­யன் கான் பிணை கோரிய மனு மீதான விசா­ரணை நேற்று மீண்­டும் நடைபெற்றது.

அப்­போது, ஆர்­யன் கான் தொடர்ந்து போதைப்­பொ­ருள் எடுத்­துக்­கொண்­ட­தற்­கான ஆதாரங்­கள் உள்­ள­தாக போதைப்­பொ­ருள் கட்­டுப்­பாட்டு அமைப்பு தெரி­வித்­தது.

ஆர்­யன் கான் பிணை­யில் விடு­த­லை­யா­னால் அவர் ஆதா ரங்­களை அழிக்க வாய்ப்பு உள்­ளது என பிணை வழங்க போதைப்­பொருள் கட்­டுப்­பாட்டு அமைப்பு எதிர்ப்பு தெரி­வித்­தது.

மும்பை சிறப்பு நீதி­மன்­றத்­தில் நேற்று முன்­தி­னம் நடந்த விசா ரணை­யின்­போது, ஆர்­யன் கான் போதைப் பொருளை கையில் வைத்­தி­ருக்கவில்லை என்­றும் அவர் அதனை விலை­கொ­டுத்து வாங்­க­வில்லை என்­றும் வாங்­கு­வ­தற்கு அவர் கையில் ரொக்­கப் பணம் இல்லை என­வும் வாதி­டப்­பட்­டது.

அவ­ருக்­கும் போதைப் பொருள் விவ­கா­ரத்­துக்­கும் தொடர்­பில்லை என்று வழக்­க­றி­ஞர் வாதா­டி­னார். இதை­ய­டுத்து அர­சுத் தரப்பு வாதங் களுக்­காக நீதி­மன்­றம் நேற்று 14ஆம் ேததிக்கு விசா­ர­ணையை ஒத்­தி­வைத்­தது.

கார்­டி­லியா நிறு­வ­னத்­தின் சொகு­சுக் கப்­பல் ஒன்று கடந்த 2ஆம் தேதி மும்­பை­யில் இருந்து கோவா­வுக்கு புறப்­பட்­டது. இதில் என்­சிபி அதி­கா­ரி­களும் சாதா­ரண உடை­யில் பய­ணம் செய்தனர்.

கப்­ப­லில் நடந்த கேளிக்கை விருந்­தின்­போது, போதைப்­பொ­ருள் பயன்­ப­டுத்­தி­ய­தாக ஆர்­யன் கான், 23, உள்­ளிட்ட எட்­டுப் பேரை பிடித்து விசா­ரித்­த­னர். இரண்­டாம் கட்­ட­மாக இவ்வழக்­கில் மேலும் சில­ர் கைதான நிலையில், இது­வரை 20 பேர் கைது செய்­யப்­பட்­டுள்­ள­னர்.

இந்த வழக்­கில் ஆர்­யன் கான் உள்­ளிட்ட எட்டுப் பேரை அக்­டோ­பர் 21ஆம் தேதி­வரை நீதி­மன்­றக் காவலில் வைக்க மும்பை நீதி­மன்­றம் உத்­த­ர­விட்­டது. இந்­நி­லை­யில் ஆர்­யன் கான் தரப்­பில் நேற்று பிணை கோரப்­பட்­டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!