தலைகீழாக தொங்கிய வாலிபர்; தீவிர விசாரணை

தலைகீழாக தொங்கிய வாலிபர்; தீவிர விசாரணை

1 mins read
40bbe8e6-d1d5-4a52-ad33-6fb8e1eeb705
-

புது­டெல்லி: விவ­சா­யி­கள் போராட்­டம் நடத்­திய இடத்­தில் வாலி­பர் ஒரு­வர் தலை­கீ­ழாக தொங்­க­வி­டப்­பட்ட சம்­ப­வம் பலரை அதிர்ச்சி அடைய வைத்­துள்­ளது. அந்த வாலி­பர் கொடூ­ர­மான முறை­யில் கொல்­லப்­பட்­ட­தாக போலிசார் தெரி­வித்­த­னர்.

ஹரி­யா­னா­வின் சோனி­பட் மாவட்­டத்­தில் உள்ள குண்ட்லி என்ற இடத்­தில் தடுப்பு வேலி­யில் ரத்த வெள்­ளத்­தில் வாலி­பர் தொங்­க­வி­டப்­பட்­டிந்­தார்.

"நேற்று காலை 5.00 மணி அள­வில் கை, கால்­கள் வெட்­டப்­பட்ட நிலை­யில் வாலி­ப­ரின் உடலை மீட்­டுள்­ளோம்.

"இந்­தச் சம்­ப­வத்­தைக் கொலை­யா­கப் பதிவு செய்­துள்­ளோம். தீவிர விசா­ரணை நடை­பெற்று வரு­கிறது," என்று பிடிஐ செய்தி நிறு­வ­னத்­தி­டம் போலிஸ் அதி­கா­ரி­யான சந்­தீப் கிர்­வார் கூறி­ய­தாக என்­டி­டிவி குறிப்­பிட்­டது.

வாலி­பரை 'நிஹாங்ஸ்' என்ற சீக்­கிய போரா­ளிக் குழு­வி­னர் கொன்று இருக்­க­லாம் என சந்­தே­கிக்­கப்­ப­டு­கிறது.

கொல்­லப்­பட்ட வாலி­பர், 39 வயது லக்­பீர் சிங் என போலி­சார் அடை­யா­ளம் கண்­டு­பி­டித்­துள்­ள­னர்.

இது தொடர்­பாக வெளி­யான முதல் காணொ­ளி­யில் மணிக்­கட்டு வெட்­டப்­பட்ட வாலி­ப­ரின் முன்­னால் நிஹாங் குழு உறுப்­பி­னர்­கள் நின்று கொண்­டி­ருந்­த­தைப் பார்த்­த­தாக சிலர் கூறி­னர்.

மற்­றொரு காணொளி, வாலி­பர் தலை­கீ­ழாக தொடங்­க­வி­டப்­பட்­ட­தை­யும் 3வது காணொளி, தரை­யில் கிடந்த அந்த வாலி­ப­ரின் கடை­சித் தரு­ணத்தை சிலர் தங்­க­ளு­டைய கைத்­தொ­லை­பே­சி­யில் படம் பிடித்­துக் கொண்­டி­ருந்­த­தை­யும் காட்­டி­யது.

சீக்­கி­யர்­க­ளின் புனித நூலான குரு கிரந்த் சாஹிப்பை அவ­ம­தித்­த­தா­கக் கூறி வாலி­பரை 'நிஹாங்ஸ்' குழு­வி­னர் அவரை அடித்­துக் கொன்­ற­தா­கக் கூறப்­ப­டு­கிறது. போலி­சார் விசா­ரித்து வரு­கின்­ற­னர்.