இந்தியாவில் மேலும் 16,862 பேர் பாதிப்பு

இந்தியாவில் மேலும் 16,862 பேர் பாதிப்பு

1 mins read
d992a293-bc18-4dad-851a-b2d9ab45517c
-

புது­டெல்லி: இந்­தி­யா­வில் மேலும் 16,862 பேர் பாதிக்­கப்­பட்­ட­னர் என்று சுகா­தார அமைச்சு தெரி­வித்­தது. தொற்று பாதிப்­பில் இருந்து மேலும் 19,391 பேர் குணம் அடைந்­த­னர். தொற்­றுப் பாதிப்­புக்கு ஒரே நாளில் 379 பேர் உயி­ரி­ழந்­துள்­ள­னர்.

இந்­தி­யா­வில் இது­வரை தொற்றால் பாதித்­த­வர்­கள் எண்­ணிக்கை 3 கோடியே 40 லட்­சத்து 37 ஆயி­ரத்து 592 ஆக உயர்ந்­துள்­ளது.

தொற்று பாதிப்­பு­டன் சிகிச்­சை­யில் உள்­ள­வர்­கள் எண்­ணிக்கை 2 லட்­சத்து 3 ஆயி­ரத்து 678ஆக உள்­ளது.

கொரோனா தொற்­றில் இருந்து இது­வரை குணம் அடைந்­த­வர்­கள் எண்­ணிக்கை 3 கோடியே 33 லட்­சத்து 82 ஆயி­ரத்து 100ஆக உயர்ந்துள்­ளது.

கொரோனா தொற்­றுக்கு இது­வரை உயி­ரி­ழந்­த­வர்­கள் எண்­ணிக்கை 4 லட்­சத்து 51 ஆயி­ரத்து 814ஆக அதி கரித்­துள்­ளது.