மக்களிடம் யோசனை கேட்கும் பிரதமர் மோடி

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் வானொலியில் ‘மனதின் குரல்’ (மன் கி பாத்) என்ற நிகழ்ச்சியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார். அதில் பல்வேறு அம்சங்கள் குறித்து அவர் விவாதிப்பார்.

இந்நிலையில், பிரதமர் மோடி பங்கேற்க உள்ள ‘மனதின் குரல்’ நிகழ்ச்சி வரும் 24ஆம் தேதி ஒலிபரப்பாகிறது. அதில், தான் என்ன பேசவேண்டும் என்று தாங்கள் விரும்பும் அம்சங்களைத் தெரிவிக்குமாறு பொதுமக்களுக்குப் பிரதமர் மோடி அழைப்புவிடுத்தார்.

“இந்த மாதம் 24ஆம் தேதி மனதின் குரல் நிகழ்ச்சி ஒலிபரப்பாகிறது. இந்த மாத நிகழ்ச்சிக்கு உங்கள் யோசனைகளை வரவேற்கிறேன். அவற்றை நீங்கள் நமோ செயலி அல்லது 1800-11-7800 என்ற எண்ணுக்கு அனுப்பலாம்.

“மேலும் https://mygov.in/group-issue/in என்ற இணையத் தளத்திலும் பதிவு செய்யலாம்,” என தனது டுவிட்டரில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!