மேலும் ஒரு கார் மோதும் வன்செயல்; மூவர் காயம்

மேலும் ஒரு கார் மோதும் வன்செயல்; மூவர் காயம்

1 mins read
3cbaa39f-b8d5-4069-b3c5-5dda64b2a988
பக்தர்கள் மீது கார் மோதி யதை அங்கு இருந்த வர்கள் எடுத்த காணொளி கள் காட்டின. படம்: ஊடகம் -

போபால்: இந்­தி­யா­வில் கூட்­டத்­தினர் மீது கார் மோதல் சம்ப­வங்­கள் மூன்­றாகி உள்­ளன.

உத்­த­ரப் ­பி­ர­தேச மாநி­லம் லக்­கிம்­பூ­ரில் கடந்த 3ஆம் தேதி விவ­சா­யி­கள் பேர­ணி­யின்போது மத்­திய உள்­துறை இணை­ய­மைச்­சர் அஜய் மிஸ்­ரா­வின் மகன் ஆஷிஷ் மிஸ்­ரா­வின் கார் மோதி­ய­தில் நான்கு விவ­சா­யி­கள் உயி­ரி­ழந்­த­னர்.

இது தொடர்­பாக ஆஷிஷ் மிஸ்ரா மீது கொலை வழக்­குப்­பதிவு செய்­துள்ள காவல்­து­றை­யினர், அவ­ரைக் கைது செய்து சிறை­யில் அடைத்­துள்­ள­னர்.

இந்­நி­லை­யில், சட்­டீஸ்­கர் மாநி­லம் ஜாஷ்­பூர் மாவட்­டத்­தில் பதால்­கோன் எனும் பகு­தி­யில் விஜ­ய­த­சமி பண்­டிகை நாளில் துர்க்கை அம்­மன் சிலை­களை ஆற்­றில் கரைப்­பதற்­காக ஆற்­றுக்குப் பக்­தர்­கள் திர­ளாக சென்று கொண்­டி­ருந்­த­போது வேக­மாக வந்த கார் ஒன்று அவர்­களை பின்­னாலிருந்து மோதி­யது. பலத்த காயம் அடைந்த பக்தர் ஒரு­வர் சம்­பவ இடத்­தி­லேயே உயிர் இழந்­தார்.

சுமார் 20க்கும் மேற்­பட்­டோ­ருக்கு காயம் ஏற்­பட்­டது. லக்கிம்­பூ­ரில்­ ப­ர­ப­ரப்பு அடங்­கு­வ­தற்­குள் சட்­டீஸ்­கர் சம்­ப­வம் இடம்­பெற்­றது.

இந்­நி­லை­யில், மத்­தி­யப் பிர­சேத்­தில் போபால் நக­ரில் சனிக்­கி­ழமை பின்­நே­ரத்­தில் பக்­தர்­கள் துர்கை அம்மன் சிலை­களை ஆற்­றில் கரைக்க சென்றுகொண்டு இருந்­த­போது வேக­மாக வந்த ஒரு கார் அவர்­களை மோதித் ­தள்­ளி­யது.

பதின்ம வய­துள்ள ஒரு­வர் உட்­பட மூவர் காயம் அடைந்­த­னர்.

இச்சம்ப­வத்­தைக் காட்­டும் காணொளி பெரும் பர­ப­ரப்­பாகி இருப்பதாக ஊட­கத் தக­வல்­கள் கூறின. அதி­கா­ரி­கள் விசா­ர­ணை­நடத்­தி­வ­ரு­வ­தா­க­வும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

உத்தரப் பிரதேசம், சட்டீஸ்கரைத் தொடர்ந்து மத்தியப் பிரதேசத்தில் பயங்கரம்