காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் சோனியா ஆவேசம்: நானே முழு நேர தலைவர் என்றார்

காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் சோனியா ஆவேசம்: நானே முழு நேர தலைவர் என்றார்

2 mins read
15844823-770c-4f06-8f0c-a4c062e4a8d2
-

புது­டெல்லி: காங்­கி­ரஸ் கட்­சி­யின் இடைக்­கால தலை­வ­ரான சோனியா காந்­தி, கட்­சி­யின் முழு நேர தலைவர் தானே என்று ஆவே­ச­மாகக் கூறி அதி­ருப்­தி­யா­ளர்­களுக்கு கண்­ட­னம் தெரி­வித்­தார்.

காங்­கி­ரஸ் கட்­சிக்கு முழு நேரத்­ த­லை­வர் வேண்­டும், அமைப்பு ரீதி­யில் கட்­சியை மாற்­றி­ய­மைக்க வேண்­டும் என அதி­ருப்தி தலை­வர்­கள் 23 பேர் தொடர்ந்து குரல் எழுப்பி வந்த நிலை­யில், கட்­சி­யின் செயற்­குழுக் கூட்­டம் புது­டெல்­லி­யில் சனிக்­கி­ழமை நடந்­தது.

அதில் பேசிய சோனியா, யாரும் தன்­னு­டன் ஊட­கம் வழி­யாக பேசத் தேவை­யில்லை என்­றார்.

ஒட்­டு­மொத்த கட்­சிக்­கும் புத்­து­யி­ரூட்ட வேண்டி இருப்­ப­தா­க­வும் அதற்குக் கட்­சி­யில் ஒற்­றுமை நிலவ வேண்­டி­யது அவ­சி­ய­மா­னது என்­றும் அவர் தெரி­வித்­தார்.

கட்சி நலன்­களை முதன்­மை­யா­கக் கருதி சுய கட்­டுப்­பாடு, ஒழுங்­கு­டன் நடந்­து­கொள்­ள­வேண்டும் என்று வலி­யு­றுத்­திய சோனியா, தன் பொறுப்­பு­க­ளைத் தான் செவ்­வனே செய்து வரு­வ­தா­கக் கூறி­னார்.

"நான் பொது முக்­கி­யத்­து­வம் வாய்ந்த, கவ­னம் செலுத்த வேண்­டிய பிரச்­சி­னை­களை ஒரு­போ­தும் கவ­னிக்­கா­மல் விட்­டு­வி­ட­வில்லை. மன்­மோ­கன் சிங், ராகுல் காந்தி போன்று நானும் அவற்றைப் பிர­த­ம­ரி­டம் எடுத்­துச்­சென்­றி­ருக்­கி­றேன்.

"ஒரு­மித்த கருத்­து­டைய அர­சி­யல் கட்சித் தலை­வர்­க­ளு­டன் நான் தொடர்ந்து பேசிக்­கொண்­டி­ருக்­கிறேன். தேசிய முக்­கி­யத்­து­வம் வாய்ந்த பிரச்­சி­னை­களில் கூட்­டறிக்­கை­கள் வெளி­யி­டு­கி­றோம்.

"நமது உத்­தியை நாடா­ளு­மன்­றத்­தில் எதிர்க்­கட்­சி­க­ளு­டன் சேர்ந்து ஒருங்­கி­ணைத்­துள்­ளேன்," என்று அவர் குறிப்பிட்டார்.

காங்­கி­ரஸ் தலை­வரை ஜூன் 30ஆம் தேதிக்­குள் தேர்ந்­தெ­டுத்து விட முடிவு செய்­தி­ருந்­த­தா­க­வும் கொரோனா 2வது அலை­யால் அது கால­வ­ரம்பின்றி ஒத்தி போடப்­பட்­டது என்­றும் அவர் தெரி­வித்­தார்.

கட்­சி­யின் முழு­மை­யான அமைப்புத் தேர்­தல்­க­ளுக்­கான அட்­ட­வணை, செயற்­குழு உறுப்­பினர்­கள் முன் தாக்­கல் செய்­யப்­பட்­டுள்­ள­தா­க­வும் அவர் கூறினார்.