காஷ்மீர் வன்செயல்கள்: மரணம் கூடுகிறது; மேலும் 6 பேர் பலி

காஷ்மீர் வன்செயல்கள்: மரணம் கூடுகிறது; மேலும் 6 பேர் பலி

1 mins read
68081057-78f8-4af9-9b5f-f862a4e847b7
-

ஸ்ரீந­கர்: இந்­தியா வசம் உள்ள காஷ்­மீ­ரில் சனிக்­கி­ழ­மை­யன்று கல­கக்காரர்­க­ளுக்­கும் அர­சாங்­கத் துருப்­பு­க­ளுக்­கும் இடை­யில் நிகழ்ந்த மோத­லில் மேலும் ஆறு பேர் கொல்­லப்­பட்­ட­தாக அதி­காரிகள் தெரி­வித்­த­னர்.

அங்கு வன்­செ­யல்­ அதி­கரித்து ­வ­ரு­வ­தாக அவர்­கள் கூறி­னர். கட­ந்த இரண்டு வாரங்­களில் குறைந்­த­பட்­சம் 28 பேர் கொல்­லப்­பட்­டுள்­ள­னர். மாண்­ட­வ­ர்களில் ஒன்­பது பேர் பொது­மக்­கள்.

சனிக்­கி­ழ­மை­யன்று பயங்கர­வாதி­கள் இரண்டு பேர் கொல்­ல­ப்­பட்­ட­தாக ஸ்ரீந­கர் போலிஸ் அதி­காரி விஜய் குமார் தெரி­வித்­தார்.

அதற்­குப் பிறகு வெளி­மா­நி­லத்­தைச் சேர்ந்த கூலித் தொழி­லாளி ஒரு­வ­ரை­யும் வியா­பாரி ஒரு­வ­ரை­யும் பயங்கரவாதிகள் கொன்ற­தாக ராணு­வப் பேச்­சா­ளர் கூறி­னார். சாலை­களில் நிகழ்ந்த கைகலப்­பு­களில் இரு­வர் மாண்­ட­னர்.

காஷ்­மீ­ரில் குடி­மக்­கள் கொல்­லப்­ப­டு­வ­தன் தொடர்­பில் நடக்­கும் புலன்­வி­சா­ர­ணை­யை­ ஒட்டி 1,000க்கும் மேற்­பட்ட சந்­தேக நபர்­கள் கைதாகி இருப்­ப­தாக அதி­கா­ரிகள் தெரி­வித்­த­னர்.

இத­னி­டையே, காஷ்­மீ­ரைக் குறி­வைத்து பாகிஸ்­தா­னில் புதிய பயங்­க­ர­வாத இயக்­கம் தலை எடுத்து இருப்­ப­தாக இந்­திய உளவு அமைப்புகள் எச்­ச­ரித்­துள்­ளன.

காஷ்­மீ­ரில் உள்ள அர­சி­யல்­வாதி­கள், காவல்­துறை அதி­கா­ரி­கள், அர­சுக்கு உத­வி­யாக இருக்­கும் செய்­தித் துறை­யி­னர், காஷ்­மீரி அல்­லா­தோர் ஆகி­யோரை இலக்­காகக் கொண்டு அந்தப் பயங்­க­ர­வாத இயக்­கத்­தி­னர் களம் இறங்­க­உள்­ள­தாக உள­வுத் துறை விழிப்பூட்டி இருக்கிறது என்று ஊட­கத் தக­வல்­கள் கூறின.

காஷ்­மீ­ரில் தாக்­கு­தல் நடத்­து­வதற்­காக 200 இடங்­களை அந்தப் பயங்­க­ர­வாத அமைப்பு தேர்வு செய்­துள்­ள­தா­க­வும் இந்திய உள­வுத் துறை அமைப்புகள் தெரி­வித்­து உள்­ளன.