மக்களிடம் யோசனை கேட்கும் பிரதமர் மோடி

மக்களிடம் யோசனை கேட்கும் பிரதமர் மோடி

1 mins read
0233aa68-7c68-41fc-a56b-5dcaada07b14
பிரதமர் மோடி. படம்: ஊடகம் -

புது­டெல்லி: பிர­த­மர் நரேந்­திர மோடி ஒவ்­வொரு மாத­மும் கடைசி ஞாயிற்­றுக்­கி­ழ­மை­களில் வானொலி­யில் 'மன­தின் குரல்' (மன் கி பாத்) என்ற நிகழ்ச்­சி­யில் நாட்டு மக்­க­ளுக்கு உரை­யாற்­று­கி­றார். அதில் பல்­வேறு அம்­சங்­கள் குறித்து அவர் விவா­திப்­பார்.

இந்­நி­லை­யில், பிர­த­மர் மோடி பங்­கேற்க உள்ள 'மன­தின் குரல்' நிகழ்ச்சி வரும் 24ஆம் தேதி ஒலி­ப­ரப்­பா­கிறது. அதில், தான் என்ன பேச­வேண்­டும் என்று தாங்­கள் விரும்­பும் அம்­சங்­க­ளைத் தெரி­விக்­கு­மாறு பொது­மக்­க­ளுக்­குப் பிர­த­மர் மோடி அழைப்­பு­வி­டுத்­தார்.

"இந்த மாதம் 24ஆம் தேதி மன­தின் குரல் நிகழ்ச்சி ஒலிபரப்­பா­கிறது. இந்த மாத நிகழ்ச்­சிக்கு உங்­கள் யோச­னை­களை வர­வேற்­கி­றேன். அவற்றை நீங்­கள் நமோ செயலி அல்­லது 1800-11-7800 என்ற எண்­ணுக்கு அனுப்­ப­லாம்.

"மேலும் https://mygov.in/group-issue/in என்ற இணையத் தளத்­தி­லும் பதிவு செய்­ய­லாம்," என தனது டுவிட்­ட­ரில் அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.