இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் கைது

சண்டிகர்: முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கை ஹரியானா காவல்துறை நேற்று முன்தினம் சனிக்கிழமை கைது செய்தது. சில மணி நேரங்களுக்குப்பின் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.


சென்ற ஆண்டு ஜூலை மாதம் இந்திய வீரர் ரோகித் சர்மாவுடன் யுவராஜ் சிங் இன்ஸ்டகிராமில் நேரலையாக உரையாடினார். அப்போது, சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சஹலின் டிக்டாக் காணொளிகள் தொடர்பிலும் அவர்கள் பேசினர்.


அச்சமயம், சஹல் குறித்து யுவராஜ் கூறிய கருத்துகள் சமூக ஊடகங்களில் பரவலாகி, பெரும் சர்ச்சையைக் கிளப்பின.


இந்நிலையில், “நீதிமன்ற உத்தரவின்படி, யுவராஜைக் கைது செய்து, பின்னர் இடைக்காலப் பிணையில் விடுவித்துவிட்டோம்,” என்று ஹன்சி நகரக் காவல்துறை உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் (வன்கொடுமைத் தடுப்பு) சட்டத்தின்கீழ் யுவராஜைக் கைதுசெய்ய வேண்டுமென ரஜத் கல்சன் என்ற சமூகச் செயற்பாட்டாளர் புகார் அளித்திருந்தார்.


“யுவராஜ் சிங்கை விசாரணையில் சேர்க்க வேண்டும் என்று இம்மாதம் 6ஆம் தேதி காவல்துறை கேட்டுக்கொள்ளப்பட்டது. இந்நிலையில், ஹிசாரில் காவல்துறையிடம் யுவராஜ் சரணடைந்ததாக அறிந்தோம். இரண்டு, மூன்று மணி நேர விசாரணைக்குப் பின் அவர் கைது செய்யப்பட்டார். பின்னர் பிணையின்கீழ் அவர் விடுவிக்கப்பட்டார்,” என்று திரு ரஜத் விவரித்தார்.


இதன் தொடர்பில் இன்னும் சில நாள்களில் காவல்துறை அறிக்கை தாக்கல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.


முன்னதாக, “என் நண்பர்களுடன் உரையாடியபோது நான் சொன்னவை தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளதாக அறிகிறேன். அது தேவையற்றது. இருப்பினும், பொறுப்புள்ள ஓர் இந்தியனாக, தற்செயலாக எவரது உணர்வுகளை அல்லது எண்ணங்களை நான் காயப்படுத்தி இருந்தால் அதற்காக வருத்தம் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்,” என்று கடந்த ஆண்டு ஒரு டுவிட்டர் பதிவு வழியாக யுவராஜ் விளக்கம் அளித்திருந்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!