கேரளா: வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட வீடு (காணொளி)

கேரளா: வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட வீடு (காணொளி)

1 mins read
bf620a27-f719-4631-8a30-76e128ae8dcb
சம்பவம் நிகழ்ந்தபோது, வீட்டில் ஒருவரும் இல்லாததால் உயிருடற்சேதம் தவிர்க்கப்பட்டது. காணொளிப்படம் -
Google News Preferred Icon

திருவனந்தபுரம்: இந்தியாவின் கேரள மாநிலத்தில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவு காரணமாக மாண்டோர் எண்ணிக்கை 24ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், கோட்டயம் மாவட்டத்தில் முண்டகாயம் எனும் ஊரில் வீடு ஒன்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் காணொளி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.

அந்த இரண்டு தள வீட்டிற்குப் பின்னால் உள்ள ஆற்றில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடும் நிலையில், அவ்வீடு மெதுவாகச் சாய்கிறது. பின்னர் திடீரென அடியோடு பெயர்ந்து விழுந்து, வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுவதைக் காணொளி காட்டுகிறது.

நல்ல வேளையாக, அப்போது அவ்வீட்டில் எவரும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்