கேரளாவில் தொடரும் கனமழை, வெள்ளம், நிலச்சரிவு: மக்கள் தவிப்பு

திரு­வ­னந்­த­புரம்: கேர­ளா­வில் நீடித்து வரும் கன­ம­ழை­யால் சேதங்­களும் உயி­ரி­ழப்­புகளும் அதி­க­ரித்து வரு­கின்­றன. நேற்று மாலை நில­வ­ரப்­படி, பலி­யா­னோர் எண்­ணிக்கை 27ஆக கூடி­யுள்­ளது.

மழை­யால் ஏற்­பட்டு வரும் நிலச்­ச­ரி­வு­களில் சிக்கி பல வீடு­கள் முற்­றி­லு­மா­கச் சேத­ம­டைந்­துள்­ளன. அம்­மா­நி­லத்­தில் உள்ள முக்­கிய அணை­கள் அனைத்­தும் வேக­மாக நிரம்பி வரு­கின்­றன.

முன்னெச்­ச­ரிக்கை நட­வடிக்கை­யாக மலம்­புழா, மலங்­கரா, நெய்­யாறு, அரு­விக்­கரா, வாளை­யாறு, போதுண்டி, புள்­ளி­யாய், பரம்­பிக்­கு­ளம், காஞ்­சி­ர­புழா உள்­ளிட்ட அணை­கள் திறக்­கப்­பட்டு உள்­ளன. இத­னால் ஆறு­களில் வெள்­ளப்­பெ­ருக்கு ஏற்­பட்டுள்­ளது.

இத­னால் கரை­யோ­ரங்­களில் உள்ள பல வீடு­கள் வெள்­ளத்­தில் அடித்­துச்­செல்­லப்­பட்டுள்­ளன. இது தொடர்­பாக சமூக வலைத்­த­ளங்­களில் பகி­ரப்­படும் சில காணொ­ளிப் பதி­வு­கள் நெஞ்­சைப் பதற வைப்­ப­தாக உள்­ளன. ஒன்­பது முக்­கிய அணை­க­ளுக்கு சிவப்பு எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது.

பெரும்­பா­லான மாவட்­டங்­களில் விவ­சாய நிலங்­களில் மழை நீர் தேங்கி­யுள்­ள­தால் பெரும் இழப்பு­களை எதிர்­கொண்­டுள்­ள­தாக விவ­சா­யி­கள் கூறி­யுள்­ள­னர்.

அர­பிக்­க­ட­லில் உரு­வாகி உள்ள குறைந்த காற்­ற­ழுத்த தாழ்வுப் பகுதி கார­ண­மாக கேர­ளா­வின் பெரும்­பாலான பகு­தி­களில் கன­மழை நீடித்து வரு­கிறது. இத­னால் மக்­க­ளின் இயல்பு வாழ்க்கை வெகு­வா­கப் பாதிக்­கப்­பட்­டுள்­ளது.

இந்­நி­லை­யில் கேரள முதல்­வர் பின­ராயி விஜ­யனை தொலை­பேசி வழி தொடர்புகொண்டு பேசிய பிர­த­மர் மோடி, மழை, வெள்ள நில­வ­ரம் குறித்து விவ­ரங்­க­ளைக் கேட்­டறிந்­தார்.

நிலச்­ச­ரி­வில் சிக்கி பலி­யா­வோ­ரின் எண்­ணிக்­கை­தான் அதி­க­மாக உள்­ளது என்­றும் மீட்­புப் பணி­களில் இரண்டு ராணுவ ஹெலி­காப்­டர்­கள் ஈடு­பட்­டுள்­ள­தா­க­வும் அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர். மேலும், கடற்­படை விமா­னம் நிவா­ரணப் பொருள்­களை விநி­யோ­கிக்­கும் நட­வ­டிக்­கை­யில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

பத்­த­னம் திட்டா மாவட்­டத்­தில் பெய்­துள்ள பலத்த மழை­யால் பெரும்­பா­லான சாலை­கள் வெள்­ளத்­தில் மூழ்­கி­யுள்­ளன. பம்பை நதி­யில் வெள்­ளப்­பெ­ருக்கு ஏற்­பட்­டதை அடுத்து சப­ரி­ம­லைக்­குச் செல்ல தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!