லக்னோ: நாடு தழுவிய அளவில் விவசாய சங்கங்கள் நடத்திய ரயில் மறியல் போராட்டம் காரணமாக, பல்வேறு இடங்களில் ரயில் சேவை பாதிக்கப்பட்டது.
அண்மையில் உத்தரப் பிரதேச மாநிலம், லக்கிம்பூர் பகுதியில் நிகழ்ந்த வன்முறைச் சம்பவம் தொடர்பில் மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவை பதவி நீக்கி, கைது செய்ய வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
இதை வலியுறுத்தி நேற்று நாடு முழுவதும் காலை முதல் மாலை நான்கு மணி வரை ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட வட மாநிலங்களில் ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர்.