சர்ச்சை பேச்சு: யுவராஜ் சிங் கைதாகி பிணையில் விடுவிப்பு

சண்­டிகர்: முன்­னாள் இந்­திய கிரிக்­கெட் வீரர் யுவ­ராஜ் சிங்கை (படம்) ஹரி­யானா காவல்­துறை கடந்த 16ஆம் தேதி கைது செய்­தது. சில மணி நேரங்­க­ளுக்­குப்­பின் அவர் பிணை­யில் விடு­விக்­கப்­பட்­டார்.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் இந்­திய வீரர் ரோகித் சர்­மா­வு­டன் யுவ­ராஜ் இன்ஸ்­ட­கி­ரா­மில் நேர­லை­யாக உரை­யா­டி­னார். அப்­போது, சுழற்­பந்து வீச்­சா­ளர் யுஸ்­வேந்­திர சஹ­லின் டிக்­டாக் காணொ­ளி­கள் தொடர்­பி­லும் அவர்­கள் பேசி­னர்.

அச்­ச­ம­யம், சஹல் குறித்து யுவ­ராஜ் கூறிய கருத்­து­கள் சமூக ஊட­கங்­களில் பர­வ­லாகி, பெரும் சர்ச்­சை­யைக் கிளப்­பின.

இந்­நி­லை­யில், "நீதி­மன்ற உத்­த­ர­வின்­படி, யுவ­ரா­ஜைக் கைது செய்து, பின்­னர் இடைக்­கா­லப் பிணை­யில் விடு­வித்­து­விட்­டோம்," என்று ஹரி­யா­னா­வின் ஹன்சி நக­ரக் காவல்­துறை உய­ர­தி­காரி ஒரு­வர் தெரி­வித்­தார்.

தாழ்த்­தப்­பட்­டோர், பழங்­கு­டி­யி­னர் (வன்­கொ­டு­மைத் தடுப்பு) சட்­டத்­தின்­கீழ் யுவ­ரா­ஜைக் கைது­செய்ய வேண்­டு­மென ரஜத் கல்­சன் என்ற சமூ­கச் செயற்­பாட்­டா­ளர் புகார் அளித்­தி­ருந்­தார்.

முன்­ன­தாக, "என் நண்­பர்­க­ளு­டன் உரை­யா­டி­ய­போது நான் சொன்­னவை தவ­றா­கப் புரிந்­து­கொள்­ளப்­பட்­டுள்­ள­தாக அறி­கி­றேன். அது தேவை­யற்­றது. இருப்­பி­னும், பொறுப்­புள்ள ஓர் இந்­தி­ய­னாக, எவ­ரது உணர்­வு­களை அல்­லது எண்­ணங்­களை காயப்­ப­டுத்தி இருந்­தால் அதற்­காக வருத்­தம் தெரி­விக்கிறேன்," என்று யுவ­ராஜ் சிங் விளக்­கம் அளித்­தி­ருந்­தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!