2023ல் நான்கு வீரர்கள் விண்வெளிக்கு அனுப்பப்படுவர் என இஸ்‌ரோ தகவல்

பெங்­க­ளூரு: எதிர்­வ­ரும் 2023ஆம் ஆண்டு இந்­தியா நான்கு வீரர்­களை விண்­வெ­ளிக்கு அனுப்பி வைக்­கும் என இந்­திய விண்­வெளி ஆய்­வுக் கழ­கத்­தின் அறி­வி­யல் செய­லா­ளர் ஆர்.உமா­ம­கேஷ்­வ­ரன் தெரி­வித்­துள்­ளார்.

நிகழ்ச்சி ஒன்றில் கலந்து­கொண்டு பேசிய அவர், கொரோனா நெருக்­கடி கார­ண­மாக இந்­திய வீரர்­களை அடுத்த ஆண்டு விண்­வெ­ளிக்கு அனுப்­பும் திட்­டம் தள்­ளி­வைக்­கப்­பட்­டுள்­ளது­என்றார்.

விண்­வெ­ளிக்கு அடுத்த ஆண்டே இந்­திய வீரர்­களை அனுப்­பும் திட்­டத்­தில் பிர­த­மர் மோடி மிகுந்த ஆர்­வத்­து­டன் இருந்­த­தாக குறிப்­பிட்ட அவர், அதற்­கான வாய்ப்­பைத் தவற விட்­டு­விட்­ட­தாக தெரி­வித்­தார்.

"இந்­தியா சார்­பில் மனி­தர்­கள் அல்­லாத விண்­க­லன்­களை விண்­வெ­ளிக்கு அனுப்­பும் திட்­ட­மா­னது இரண்டு கட்­டங்­க­ளா­கச் செயல்­படுத்­தப்­பட உள்­ளது. மனி­தர்­களை விண்­வெ­ளிக்கு அனுப்­பும் ககன்­யான் திட்­டத்­துக்­கான விண்­க­லம் முழுக்க இந்­தி­யா­வி­லேயே உரு­வாக்­கப்­பட உள்­ளது," என்று உமா­ம­கேஷ்­வ­ரன் கூறினார்.

மற்ற தொழில்­க­ளைப் போல் அல்­லா­மல் விண்­வெ­ளித்­து­றை­யில் கட்­டு­மா­னங்­கள், கரு­வி­க­ளைத் தயா­ரிப்­பது ஆகி­யவை தொடர்­பில் நேர­டி­யாக களத்­தில் பணி­யாற்ற வேண்­டிய சூழ்­நிலை உள்­ளது என்று உமா­ம­கேஷ்­வ­ரன் மேலும் தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!