தேர்தல் வியூகம் அமைத்த நிறுவனங்களில் சோதனை

தேர்தல் வியூகம் அமைத்த நிறுவனங்களில் சோதனை

1 mins read
cbbfeb59-16f7-4bef-bdd8-3fa9a3624e69
-

பெங்­க­ளூரு: சட்­ட­மன்ற, நாடாளு­மன்­றத் தேர்­த­லின் போது காங்­கி­ரஸ் கட்­சிக்கு தேர்­தல் வியூ­கம் வகுத்­துக் கொடுத்த தனி­யார் நிறு­வ­னங்­களில் மத்­திய வரு­மான வரித்­துறை அதி­ரடிச் சோதனை நட­வ­டிக்கை மேற்­கொண்­டது.

அசாம், சத்­தீஸ்­கர் மாநி­லங்­களில் சட்­டப்­பே­ர­வைத் தேர்­த­லின்­போது பெங்­க­ளூ­ரு­வில் இயங்கி வரும் 'டிசைன்­பாக்ஸ்டு' என்ற நிறு­வ­னம் பிர­சார நட­வ­டிக்­கை­க­ளுக்­கும் வாக்கு சேக­ரிப்­ப­தற்­கும் வியூக ஆலோ­ச­க­ரா­கச் செயல்­பட்­டது.

இதே போல் சூரத், சண்­டி­கர் உள்­ளிட்ட நக­ரங்­களில் இயங்கி வரும் இதர சில நிறு­வ­னங்­களும் காங்­கி­ர­சுக்­காக வியூ­கம் அமைத்­துக் கொடுத்­தன.

இந்­நி­லை­யில், ஏழு நக­ரங்­களில் இயங்கி வரும் ஏழு வியூக நிறு­வ­னங்­களில் நேற்று முன்­தி­னம் வரு­மான வரித்­து­றை சோதனை நடத்­தி­யது.

அப்­போது கணக்­கில் காட்­டப்­படாத பல கோடி ரூபாய் மதிப்­புள்ள முத­லீ­டு­கள் தொடர்­பான ஆவ­ணங்­கள் சிக்­கி­ய­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

மேலும், 70 கோடி ரூபாய்க்கு இந்­நி­று­வ­னங்­கள் போலிக் கணக்­கு­கள் காட்­டி­யி­ருப்­ப­தும் கண்­டு­பி­டிக்­கப்­பட்­ட­தா­கத் தெரி­கிறது.

இந்­நி­லை­யில், காங்­கி­ரஸ் கட்­சிக்­காக பணி­யாற்­றி­ய­தால் அர­சி­யல் பழி­வாங்­கும் நட­வ­டிக்கை நடந்து கொண்­டி­ருப்­ப­தாக பெங்­க­ளூரு நிறு­வ­னத்தின் நிர்வாகத்தரப்பு கூறி­உள்­ளது.