வெளிநாடுவாழ் இந்தியரின் வங்கிக் கணக்கில் மோசடி: 12 பேர் கைது

புது­டெல்லி: வெளி­நா­டு­வாழ் இந்­தி­யர் ஒரு­வ­ரின் வங்­கிக் கணக்­கில் ஊடு­ருவி, ரூ.5 கோடி பண­மெ­டுக்க முயன்­ற­தா­கக் கூறி, எச்­டி­எ­ஃப்சி வங்கி ஊழி­யர்­கள் மூவர் உட்­பட 12 பேரை டெல்லி இணை­யக் குற்­றப்­பி­ரிவு போலி­சார் கைது செய்­த­னர்.

அந்­தத் தொழி­ல­தி­ப­ரின் கணக்­கில் ரூ.200 கோடி இருப்­ப­தா­க­வும் குற்­றம்­சாட்­டப்­பட்­ட­வர்­கள் அவ­ரது கணக்­கில் இருந்து தங்­க­ளது கணக்­கு­க­ளுக்­குப் பணத்தை மாற்ற 66 முறை முயன்­ற­தா­க­வும் போலிஸ் தெரி­வித்­தது.

"என்­ஆர்ஐ வங்­கிக் கணக்­கில் சட்­ட­வி­ரோ­த­மாக ஊடு­ருவ முயன்­ற­தாக எச்­டி­எ­ஃப்சி வங்­கி­யி­டம் இருந்து புகார் வந்­தது. மோச­டி­யா­கப் பெறப்­பட்ட காசோ­லைப் புத்­த­கத்­தைக் கொண்டு அந்­தக் கணக்­கில் இருந்து பணம் எடுக்க முயன்­றுள்­ள­னர். 'கேஒய்சி'யில் இடம்­பெற்­றுள்ள கைபேசி எண்­ணை­யும் மாற்ற முயன்­றுள்­ள­னர்," என்று டெல்லி இணை­யக் குற்­றப்­பி­ரிவு போலிஸ் உய­ர­தி­காரி கே.பி.எஸ்.மல்­ஹோத்ரா கூறி­ய­தாக 'இந்­தி­யன் எக்ஸ்­பி­ரஸ்' செய்தி தெரிவிக்கிறது.

இத­னை­ய­டுத்து, ஆதா­ரங்­க­ளைத் திரட்டி, சந்­தே­கப் பேர்­வ­ழி­களை போலி­சார் அடை­யா­ளம் கண்­ட­னர். டெல்லி, ஹரி­யானா, உத்­த­ரப் பிர­தேச மாநி­லங்­களில் 20 இடங்­களில் அவர்­கள் அதி­ர­டிச் சோதனை நடத்தி, 12 பேரைக் கைது செய்­த­னர்.

கைதா­ன­வர்­களில் எச்­டி­எ­ஃப்சி வங்­கி­யில் வாடிக்­கை­யா­ளர் தொடர்பு மேலா­ள­ரா­கப் பணி­யாற்­றிய 32 வய­துப் பெண் ஒரு­வ­ரும் அடங்­கு­வார்.

மோச­டித் திட்­டத்­தின் மூளை­யா­கச் செயல்­பட்­ட­வன், வெகு நாள்­க­ளாக அந்­தக் கணக்­கில் பரி­வர்த்­தனை எது­வும் இடம்­பெறா­த­தை­யும் அதில் ஏரா­ள­மான பணம் இருப்­ப­தை­யும் அறிந்து, பின்­னர் தன் கூட்­டா­ளி­கள் மூவ­ரைச் சேர்த்­துக்­கொண்டு இந்­தச் சதி­யில் இறங்­கி­ய­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

மோசடி மூலம் வரும் பணத்­தில் பங்கு தரு­வ­தாக ஆசை­காட்டி, எச்­டி­எ­ஃப்சி வங்­கி­யின் அந்­தப் பெண் ஊழி­யரை அவர்­கள் தங்­க­ளது வலை­யில் வீழ்த்­தி­ உள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!