இந்தி கற்கச் சொன்ன ஊழியருக்கு கடும் எதிர்ப்பு

இந்தி கற்கச் சொன்ன ஊழியருக்கு கடும் எதிர்ப்பு

1 mins read
a9f44f07-57a3-408f-9ef1-baa4fb6bdb53
-

சென்னை: உணவு விநி­யோக சேவை­யில் ஈடு­பட்­டுள்ள தனி­யார் நிறு­வ­னத்­தின் ஊழி­யர், தமி­ழ­கத்­தைச் சேர்ந்த வாடிக்­கை­யா­ளர் ஒரு­வ­ரி­டம், இந்­தி­யா­வின் தேசிய மொழி­யான இந்­தியை கற்­றி­ருக்க வேண்­டும் என்று கூறி­யது சர்ச்­சைக்கு வித்­திட்­டுள்­ளது.

அண்­மை­யில் விகாஷ் என்­ப­வர் 'ஸொமேட்டோ' நிறு­வ­னம் மூலம் சில உணவு வகை­களை வாங்­கி­யுள்­ளார்.

எனி­னும், தாம் கேட்­டி­ருந்த குறிப்­பிட்ட உணவு வந்து சேர­வில்லை என்­றும் இது தொடர்­பாக உணவு வாங்­கப்­பட்ட உண­வ­கத்தை தொடர்பு கொண்டு விசா­ரிக்­கு­மா­றும் 'ஸொமேட்டோ' ஊழி­யரை இணைய உரை­யா­டல் மூலம் அவர் கேட்­டுக்­கொண்­டுள்­ளார்.

அதற்கு அந்த ஊழியர், தாம் உண­வ­கத்தை பல­முறை தொடர்பு­கொண்டு பேசி­ய­போ­தும் தமக்கு மொழி தெரி­யா­த­தால் சரி­யாக விவ­ரம் தெரி­விக்க முடி­ய­வில்லை என்­றும் குறிப்­பிட்­டுள்­ளார்.

இதற்கு, ஸொமேட்டோ நிறு­வ­னம் தமி­ழ­கத்­தில் சேவை அளிக்­கிறது எனில், தமி­ழில் பேசக்­கூ­டிய ஒரு­வரை வாடிக்­கை­யா­ளர் சேவை பிரி­வில் வைத்­தி­ருக்க வேண்­டும் என்று விகாஷ் கூறியுள்ளார்.

ஸொமேட்டோ ஊழியரோ, இந்­தி­யா­வின் தேசிய மொழி இந்தி என்றும் எல்­லோ­ருக்­கும் சிறி­த­ள­வே­னும் இந்தி தெரிந்­தி­ருக்க வேண்­டும் என்றும் பதி­ல­ளித்­துள்­ளார்.

இதை­ய­டுத்து, இந்த விவ­கா­ரம் குறித்து டுவிட்­ட­ரில் பதி­விட்­டார் விகாஷ். இதைக்­கண்ட பலர் அத்­தனி­யார் நிறு­வ­னத்­துக்கு கண்­ட­னம் தெரி­வித்­த­னர்.

இதன் எதி­ரொ­லி­யாக அந்த ஊழி­யர் பணி­நீக்­கம் செய்­யப்­பட்­ட­தாக தக­வல் வெளி­யா­னது.

எனி­னும், பின்னர் அந்­நி­று­வ­னத்­தின் தலை­மைச் செய­ல­தி­காரி அந்த ஊழி­யரை பணி­யில் அமர்த்­தி­ இருப்­ப­தா­க­வும் நடந்த தவ­றுக்கு வருந்­து­வ­தா­க­வும் தெரி­வித்­தார்.